அமைச்சர் விஜயபாஸ்கர் உறவி னர்கள் தங்கியுள்ள தனியார் விடுதி யில் வருமான வரித்துறை அதி காரிகள் நேற்று இரவு சோதனை நடத்தினர்.
தமிழக சுகாதாரத்துறை அமைச் சர் விஜயபாஸ்கர் வீட்டில் சமீ பத்தில் வருமான வரித்துறை அதி காரிகள் சோதனை நடத்தியதில் முக்கிய ஆவணங்கள், பணம் கைபற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், பிராட்வே பூக்கடை முருகப்பா செட்டி தெருவில் உள்ள தனியார் விடுதியில் 3 அறைகளில் அமைச் சர் விஜயபாஸ்கரின் உறவினர்கள் 8 பேர் தங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது.
இதைடுத்து, வருமான வரித் துறையினருக்கு அந்த தனியார் விடுதிக்கு சென்று விசாரித்தனர். அப்போது, அவர்கள் புறப்பட்டு சென்று விட்டதாக விடுதி மேலாளர் தெரிவித்துள்ளார். இதை யடுத்து, அவர்கள் தங்கி இருந்த அறைகளுக்கு அதிகாரி கள் சென்று ஆய்வு நடத்தினர். அப்போது, அங்கு வந்த ஒருவரிடம் வரு மான வரித்துறை அதிகாரிகள் விசாரித்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது