வழக்கறிஞர்கள் சட்டத் திருத் தத்தை எதிர்த்து நடைபெற்ற போராட்டங்களில் பங்கேற்காத வழக்கறிஞரை சஸ்பெண்ட் செய்தது தொடர்பாக அகில இந்திய பார் கவுன்சில் தலை வருக்கு மதுரையிலிருந்து வழக்ககறிஞர் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
வழக்கறிஞர் சட்டத் திருத் தத்தை ரத்து செய்யக் கோரி வழக்கறிஞர்கள் ஜூன் 1-ம் தேதி முதல் காலவரையற்ற நீதிமன்ற புறக்கணிப்பு மற்றும் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின் றனர்.
ஜூலை 25-ம் தேதி உயர் நீதிமன்ற முற்றுகைப் போராட்டம் அறிவித்த நிலையில், தமிழகம் முழுவதும் 126 வழக்கறிஞர்களை அகில இந்திய பார் கவுன்சில் இடைநீக்கம் செய்தது. இருப்பி னும் திட்டமிட்டபடி உயர் நீதி மன்ற முற்றுகைப் போராட்டம் நடத்தப்பட்டது. இதையடுத்து வழக்கறிஞர் சட்டத் திருத்தத்தை நிறுத்தி வைத்து தலைமை நீதிபதி உத்தரவிட்டார்.
இந்நிலையில், போராட்டத்தில் பங்கேற்காத வழக்கறிஞர்களும் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப் பதாக வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். பார் கவுன்சி லில் உள்ள சிலரின் தனிப்பட்ட விரோதம் காரணமாக சஸ்பெண்ட் பட்டியலில் போராட்டங்களில் பங்கேற்காத வழக்கறிஞர்கள் சேர்க்கப்பட்டதாகவும் குற்றச் சாட்டு எழுந்துள்ளது.
இந்நிலையில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட 126 பேரில் ஒருவரான உயர் நீதிமன்ற மதுரை கிளை வழக்கறிஞர் எஸ்.பாஸ்கர்மதுரம் சார்பில், அகில இந்திய பார் கவுன் சில் தலைவருக்கு வழக்கறிஞர் ஏ.கண்ணன் நோட்டீஸ் அனுப்பி யுள்ளார்.
அதில் கூறியிருப்பதாவ து: வழக்கறிஞர்கள் நடத்திய எந்தப் போராட்டங்களிலும் பாஸ் கர்மதுரம் பங்கேற்கவில்லை. போராட்ட காலத்தில் நீதிமன்றங் களுக்குச் சென்று வழக்கறிஞர் களைத் தடுக்கவில்லை. இந்த காலகட்டத்தில் உயர் நீதிமன்ற கிளையிலும், பல்வேறு கீழமை நீதிமன்றங்களிலும் ஆஜராகி ஏரா ளமான வழக்குகளை தாக்கல் செய்து உத்தரவு பெற்றுள்ளார். எந்த ஆதாரமும் இல்லாத நிலையில் அவரை சஸ்பெண்ட் செய்துள்ளனர்.
இதனால் அவரது சஸ் பெண்டை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். அவரை சஸ்பெண்ட் செய்ததற்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும். இல்லையெனில் அகில இந்திய பார் கவுன்சில் தலைவர் மற்றும் உறுப்பினர், தமிழகம், புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் ஆகியோருக்கு எதிராக அவதூறு வழக்கு தொடரப்படும் என கூறப்பட்டுள்ளது.
இந்த நோட்டீஸுடன் போராட்ட காலங்களில் உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த வழக் குகள், உத்தரவு நகல்களையும் இணைத்து அனுப்பியுள்ளார்.