மறைந்த பின்னணி பாடகர் சீர்காழி கோவிந்தராஜனின் மனைவி சுலோச்சனா கோவிந்தராஜன் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 80.
சுலோச்சனா கோவிந்தராஜன், திருமணத் துக்கு முன்பே ஆசிரியராக பணியாற்றி வந்தார். சீர்காழி கோவிந்தராஜன் அறக்கட் டளையின் தலைவராக இருந்து வந்த அவர், ஏழை மாணவர்களுக்கு இலவசக் கல்வி, மருத்துவ சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு உதவிகளை வழங்கி வந்தார்.
சுலோச்சனா கோவிந்தராஜனுக்கு ஞான வல்லி என்ற மகளும், சீர்காழி சிவசிதம்பரம் என்ற மகனும் உள்ளனர். இதில் சீர்காழி சிவசிதம்பரம் பிரபல பாடகராக உள்ளார் என் பது குறிப்பிடத்தக்கது. சுலோச்சனா கோவிந் தராஜன் உடலுக்கு திமுக செயல் தலைவரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவ ருமான மு.க.ஸ்டாலின் உட்பட பல்வேறு பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர்.
கே.வி.ஆனந்த் தந்தை மரணம்
முன்னணி இயக்குநர் மற்றும் ஒளிப்பதி வாளர் கே.வி.ஆனந்தின் தந்தை வெங்கடேசன் உடல்நலக் குறைவால் காலமானார். இவருக்கு கே.வி.ஆனந்த் தவிர கமல், தர் ஆகிய மகன்கள் உள்ளனர். அவரது மறைவுக்கு திரை யுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
நடிகர் சூரி தந்தை மரணம்
நகைச்சுவை நடிகர் சூரியின் தந்தை ஆர்.முத்துசாமி, மதுரை அருகே ஒத்தக்கடை அருகில் உள்ள ராஜாகூரில் நேற்று முன்தினம் இரவு உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 75. தந்தையிடம் மிகவும் அன்புகொண்ட சூரி, தன்னுடைய நகைச்சுவைக் காட்சிகள் அனைத்தையுமே தன் தந்தையிடம் இருந்துதான் பெற்றதாக பேட்டிகளில் தெரிவித்துள்ளார். தந்தையின் மறைவையொட்டி சூரி சொந்த ஊருக்கு விரைந்துள்ளார். திரையுலக பிரபலங்கள் பலரும் சூரிக்கு ஆறுதல் தெரிவித்துள்ளனர்.