தமிழகம்

இடைத்தேர்தல் பணிகள்: மாவட்ட செயலாளர்களுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

செய்திப்பிரிவு

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பணி கள் தொடர்பாக திமுக மாவட்டச் செயலாளர்களுடன் அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று ஆலோசனை நடத்தினார்.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமை அலுவல கமான அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூடத்தில் சென்னை மற்றும் புற நகர் பகுதிகளில் உள்ள மாவட்டச் செயலாளர்கள் பங்கேற்றனர்.

ஆர்.கே.நகர் தேர்தல் தொடர் பாக கூட்டத்தில் ஆலோசிக்கப்பட் டது. தேர்தல் பிரச்சாரம், தமிழகம் முழுவதும் கட்சி நிர்வாகிகளை அழைத்து வாக்குச்சாவடி வாரி யாக பிரச்சாரத்தை திட்டமிடு வது, ஆளுங்கட்சியின் வியூகங் களை முறியடிப்பது, கூட்டணிக் கட்சியினரையும் உள்ளடக் கிய வாக்குச்சாவடிக் குழுக் களை அமைப்பது ஆகியவை குறித்து கூட்டத்தில் ஆலோசிக் கப்பட்டதாக கூறப்படுகிறது.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுக சார்பில் என்.மருது கணேஷ், அதிமுக சார்பில் அக் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் போட்டியிடுகின்றனர். ஓ.பன்னீர் செல்வம் அணியில் மதுசூதனன், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, பாஜக சார்பில் இசை யமைப்பாளர் கங்கை அமரன் ஆகியோரும் களத்தில் உள்ளனர். அங்கு பலமுனைப் போட்டி ஏற்பட்டுள்ளதால், தேர்தல் களம் பரபரப்பாகி இருக்கிறது.

SCROLL FOR NEXT