அச்சரப்பாக்கத்தில் நிழற்குடையும், தகவல் பலகையும் அமைக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கையெழுத்து இயக்கம் நேற்று நடைபெற்றது.
அச்சரப்பாக்கம் பேருந்து நிலையத்தில் நிழற்குடை இல்லாமல் உள்ளது. மேலும் இங்கு பேருந்து நின்று செல்லும் என்ற தகவல் பலகை இல்லாததால் பேருந்து நிற்கும்போதே பின்னால் வரும் வாகனங்கள் வேகமாக வருவதால் விபத்து ஏற்படுகிறது.
எனவே பேருந்து நிறுத்தமும், தகவல் பலகையும் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இந்த கையெழுத்து இயக்கத்துக்கு வட்டச் செயலர் வாசுதேவன் தலைமை தாங்கினார்.