மூத்த அரசியல்வாதியும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.செழியன் உடல் நலக்குறைவால் இன்று (செவாய்க்கிழமை) காலமானார்.
இரா. செழியனின் மறைவு குறித்து தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் வெளியிட்ட இரங்கல் செய்தியில், "மூத்தத் தலைவரும் சிறந்த நாடாளுமன்றவாதியுமான இரா. செழியன் அவர்கள் காலமான செய்தி அனைவருக்கும் ஆழ்ந்த துயரத்தை அளித்துள்ளது. எளிமையும், பண்பாடும் நிறைந்தவர்.
இந்திய நாடாளுமன்றத்தில் அவர் ஆற்றிய பணி குறிப்பாக அவசர நிலை காலத்தில் அதற்கு எதிராக நாடாளுமன்றத்தில் துணிகரமாக அவர் ஆற்றிய உரை என்றென்றும் நினைவுகூரப்படும். அவரின் மறைவின் மூலம் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை யாராலும் இட்டு நிரப்ப முடியாது" என்று கூறப்பட்டுள்ளது.