தமிழகம்

தமிழக மீனவர்களின் படகுகளை மீட்க நீதிமன்றம் உத்தரவு

செய்திப்பிரிவு

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானையைச் சேர்ந்த திரு முருகன் உயர் நீதிமன்ற கிளை யில் தாக்கல் செய்த பொதுநலன் மனுவில், “இலங்கை கடற்படையி னர் இதுவரை 120 மீன்பிடி படகு களை கையகப்படுத்தி வைத்துள்ள னர். அவற்றில் 80 படகுகள் ராமேசு வரம் மீனவர்களுக்கு சொந்த மானவை. இலங்கை கடற்படையின ரின் பிடியில் இருக்கும் 120 மீன்பிடி படகுகளை விடுவிக்க உத்தரவிட வேண்டும்” என கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் ஏ.செல்வம், பி.கலையரசன் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் ஆர்.அழகு மணி வாதிட்டார். தமிழக மீனவர் களின் படகுகளை மீட்பது தொடர் பாக மத்திய அரசுக்கு தலைமைச் செயலர் கடிதம் அனுப்பியுள்ளார் என தமிழக அரசு சார்பில் தெரி விக்கப்பட்டது.

இதையடுத்து தலைமைச் செய லரின் கடிதத்தின் அடிப்படையில் இலங்கை பிடித்து வைத்துள்ள தமிழக மீனவர்களின் படகுகளை மீட்க வெளியுறவு அமைச்சகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண் டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

SCROLL FOR NEXT