குடியரசுத்தலைவர் தேர்தலுக்காக சட்டப்பேரவை கூட்டத்தை முன் கூட்டியே முடிக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதால், அதுபற்றி முடிவு செய்ய இன்று அலுவல் ஆய்வுக்குழு கூடுகிறது.
குடியரசுத் தலைவர் தேர்தல் வரும் ஜூலை 17-ம் தேதி நடக்கிறது. இதற்கான மனுத்தாக்கல் தற்போது நடந்து வருகிறது.
அதே நேரம், தமிழகத்தில் சட்டப் பேரவைக் கூட்டத் தொடர் தற்போது நடந்து வருகிறது. இதில் குடியரசுத் தலைவர் தேர்தல் நடக்கும் ஜூலை 17-ம் தேதி போக்குவரத்துத்துறை மானிய கோரிக்கை மீதான விவா தம் நடப்பதாக ஏற்கெனவே கடந்த 7-ம் தேதி நடந்த அலுவல் ஆய்வுக் குழுவில் முடிவெடுக்கப்பட்டு அறி விக்கப்பட்டுள்ளது.
தற்போது குடியரசுத் தலைவர் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால், பேரவைக் கூட்டத்தை முன் கூட்டியே முடிக்க, தமிழக அரசு முடிவெடுத் துள்ளது.
பேரவை பணிகளில் மாற்றம்
வழக்கமாக இதை பேரவைத் தலைவர் பி.தனபால் தலைமை யிலான அலுவல் ஆய்வுக்குழு கூடியே முடிவெடுக்க வேண்டும். இதன்படி, இன்றைய பேரவைக் கூட்டம் முடிந்ததும், மாலை அலுவல் ஆய்வுக்குழு கூடுகிறது. இக்கூட்டத்தில், பெரும்பாலும் ஜூலை 13 அல்லது 14-ம் தேதிக் குள் பேரவைக்கூட்டத்தை இறுதி செய்வது குறித்து முடிவெடுக் கப்படும் என தெரிகிறது.
இவ்வாறு முன்கூட்டியே பேர வைக்கூட்டம் முடிக்கப்படுவதால், சில மானிய கோரிக்கைகள் சேர்த்து வைக்கப்படலாம் அல்லது முந் தைய சனிக்கிழமைகளில் பேரவைக் கூட்டம் நடக்கலாம். காவல்துறை மானிய கோரிக்கை 2 நாள் விவா தம், ஒரு நாள் பதிலுரை என அறிவிக் கப்பட்டுள்ளது. இதில் மாற்றம் வர லாம் என்றும் பேரவைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.