அழகிரியுடன் தனிப்பட்ட பிரச்சினை எதுவும் இல்லை என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னையில் தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டி:
உங்களுக்கு எதிராக நடந்து கொண்டதால்தான், அழகிரி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா?
கட்சிக்கு எதிராக யார் செயல்பட்டாலும், அவர்கள் மீது தலைமை நடவடிக்கை எடுக்கும். இதுகுறித்து கட்சியின் பொதுச் செயலாளர் அன்பழகன் அறிக்கை விடுத்துள்ளார்.
உங்களுக்கும் அழகிரிக்கும் உண்மை யில் என்னதான் பிரச்சினை?
எங்களுக்குள் எந்த தனிப்பட்ட பிரச்சினையும் இல்லை.
இந்த நடவடிக்கைகள் கட்சியை பல வீனப்படுத்துமா?
பலமுறை இதுபோன்று பலர் மீது கட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. அவையெல்லாம் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. அப்படித்தான் இதுவும்.
இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.