தனியார் நிறுவனங்களுக்கு ஆதர வாக செயல்பட்டு சென்னை துறை முகத்துக்கு ரூ.7.10 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக, துறைமுக அதி காரிகள் 3 பேர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.
சென்னை துறைமுகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரியாக இருப்பவர் கந்தசாமி. இவர் சிபிஐ அலுவலகத்தில் ஒரு புகார் மனு கொடுத்தார்.
அதில், “வெளிநாடுகளில் இருந்து இரும்பு தாதுவை சென்னை துறைமுகம் வாயிலாக இறக்குமதி செய்ததில், 3 நிறுவனங்களுக்கு துறைமுக அதிகாரிகள் சிலர் சாதகமாக செயல்பட்டுள்ளனர். இறக்குமதி செய்யப்பட்ட இரும்பு தாதுவின் மதிப்பீட்டை குறைத்துக் காட்டி, சென்னை துறைமுகத்துக்கு சுமார் ரூ.7.10 கோடி நஷ்டம் ஏற்படுத்தி யுள்ளனர். தனியார் நிறுவனங் களுக்கு சாதகமாக செயல்படுவ தற்காக துறைமுக அதிகாரிகள் பல லட்சம் ரூபாய் லஞ்சம் பெற் றுள்ளனர்” என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் சென்னை துறைமுக ஏற்றுமதி மற்றும் இறக்குமதி பொருட்களை மதிப்பீடு செய்யும் அதிகாரிகளான நந்தகுமார், குமார், அய்யாசாமி ஆகியோர் மீதும், இந்த முறை கேடுக்கு காரணமான 3 நிறு வனங்கள் மீதும் சிபிஐ அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.