செம்பரம்பாக்கம் ஏரி நீர் திறப்பு குறித்து நீதி விசாரணை நடத்தக் கோரி திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் அக்கட்சியினர் சென்னையில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளனர்.
டிசம்பர் 1-ம் தேதி செம்பரம் பாக்கம் ஏரியில் இருந்து முன்னறி விப்பின்றி அதிக அளவு நீர் திறந்து விடப்பட்டதே சென்னை யில் ஏற்பட்ட வெள்ள பாதிப் புக்கு காரணம். எனவே, இது குறித்து விசாரிக்க உயர் நீதி மன்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என்று கோரி ஆளுநர் ரோசய்யாவிடம் கருணாநிதி தலைமையில் திமுகவினர் அனு அளித்தனர்.
இந்த மனு மீது எந்த நடவடிக் கையும் எடுக்கப்படவில்லை. எனவே, செம்பரம்பாக்கம் நீர் திறப்பு குறித்து நீதி விசாரணை கோரி தனது தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என கருணாநிதி அறிவித்திருந்தார். அதன்படி, சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே இன்று காலை 10 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடக்கிறது.
கருணாநிதி தலைமையில் நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத் தில் கட்சியின் பொருளாளர் ஸ்டாலின், மாநிலங்களவை திமுக குழு தலை வர் கனிமொழி, மு.க.தமிழரசு, மாவட்டச் செயலாளர்கள் ஜெ.அன் பழகன் (சென்னை மேற்கு), மா.சுப்பிரமணியன் (சென்னை தெற்கு), பி.கே.சேகர்பாபு (சென்னை கிழக்கு), எஸ்.சுதர்சனம் (சென்னை வடக்கு), தா.மோ.அன்பரசன் (காஞ்சிபுரம் வடக்கு), க.சுந்தர் (காஞ்சிபுரம் தெற்கு), கும்மிடிப்பூண்டி கி.வேணு (திருவள்ளூர் வடக்கு), ஆவடி சா.மு.நாசர் (திருவள்ளூர் தெற்கு) உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.