சென்னை அண்ணா நகர் டபிள்யூ பிளாக் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் (36). திருவள்ளூர் மாவட்ட பாஜக பிர முகர். கடந்த 5-ம் தேதி குடும்பத்துடன் பெங்களூரு சென்றிருந்த இவர், நேற்று முன்தினம் இரவு வீடு திரும்பினார்.
சொகுசு காரும் மாயம்
அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது. அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 75 பவுன் நகைகள், ரூ.8.50 லட்சம் பணம் திருடப்பட்டிருந்தது.
வீட்டின் பின்பக்கம் நிறுத்தப்பட்டிருந்த சொகுசு காரையும் காணவில்லை.
இதுபற்றி அண்ணா நகர் போலீஸில் விஜயகுமார் புகார் அளித்தார். அதன்பேரில், போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வீட்டின் கதவு, பீரோவில் பதிவான கைரேகைகளை தடயவியல் நிபுணர்கள் ஆய்வு செய்தனர்.
வீட்டின் முன்பக்கத்தில் பொருத்தப் பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை துணியால் மூடிவிட்டு திருடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.