தமிழகம்

வாக்காளர் பட்டியல் புதுப்பிக்கும் பணி: தேர்தல் ஆணையம் தொடங்கியது

செய்திப்பிரிவு

வாக்காளர் பட்டியலைப் புதுப்பிக்கும் பணியை தேர்தல் ஆணையம் தொடங்கி யுள்ளது.

இதுகுறித்து, தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: 2016-ம் ஆண்டு தேசிய வாக்காளர் பட்டியல் புதுப்பிக்கும் பணியை தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. அடுத்த வாக்காளர் வரைவுப் பட்டியல் வெளியிடுவதற்கு முன்பாக இப்பணி முடிவடையும். 2017 ஜனவரி முதல் தேதியை அடிப்படையாகக் கொண்டு இப்பணி நடைபெறும். வாக்குச்சாவடி நிலை அதிகாரிகள் வீடுவீடாகச் சென்று வாக்காளர் பட்டியலை சரி பார்ப்பார்கள். இடமாற்றம், மரணம், பலமுறை பதிவு, ஆட்கள் இல்லாதது ஆகிய குறைபாடு களை அவர்கள் சரி செய்வார்கள்.

புதிய வாக்காளர்களின் பெயர்களை யும் அவர்கள் சேகரிப்பார்கள். இத்தக வல்கள் இணையதளத்தில் பதிவு செய்யப் படும். வாக்காளர்களின் கைப்பேசி எண்கள், மின்னஞ்சல் முகவரி, குடும்ப உறுப்பினர்கள் விவரம் ஆகியவற்றை கள அலுவலர்கள் சேகரிக்கின்றனர். இந்த விவரங்கள் எக்காரணம் கொண்டும் பொதுமக்கள் பார்வைக்கோ, பிற அதிகார அமைப்புகளுக்கு பகிரவோ செய்யப்படமாட்டாது. எனவே இப்பணியை மேற்கொள்ள பொதுமக்கள் தேர்தல் ஆணைய கள அலுவலர்களுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT