தமிழகம்

காளை இனங்கள் அழியாமல் பாதுகாக்க மிருகவதை தடுப்பு சட்டத்தில் வலுவான திருத்தங்கள் தேவை: பிரதமருக்கு அமைப்புகள் கடிதம்

செய்திப்பிரிவு

தமிழகத்தின் பாரம்பரிய காளை இனங்களை அழியாமல் பாது காக்கும் நோக்கில் மிருகவதை தடுப்பு சட்டத்தில் வலுவான திருத் தங்கள் கொண்டுவர வலியுறுத்தி பிரதமருக்கு பல்வேறு அமைப்பு கள் கடிதம் அனுப்பியுள்ளன.

மிருகவதை தடுப்பு சட்டத்தில் கூடுதல் திருத்தங்கள் செய்யக் கோரி சேனாபதி காங்கேயம் கால் நடை ஆராய்ச்சி மையம், இந்திய பல்லுயிர் பாதுகாப்பு கவுன்சில், உம்பளச்சேரி நாட்டு மாடு வளர்ப் போர் அமைப்பு ஆகியவை சார்பில் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

இதுகுறித்த செய்தியாளர் கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. இதில் வழக்கறிஞர் சீனி வாசன் ரத்தினசாமி கூறியதாவது:

1960-ம் ஆண்டு மிருகவதை தடுப்புச் சட்டத்தில் சில திருத் தங்கள் கொண்டுவர மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. தற் போது நடக்கும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் இது நிறை வேற்றப்பட உள்ளதாக தெரிகிறது. இதுதொடர்பாக, மத்திய அரசின் மற்ற துறைகளுக்கு வரைவு மசோதா அனுப்பப்பட்டு, கருத்து கேட்கப்பட்டுள்ளது. அந்த வரைவு மசோதாவில் கூறப்பட்டுள்ள திருத்தங்கள் போதுமானதாக, வலுவானதாக இல்லை. கூடுதலாக இன்னும் சில திருத்தங்களை சேர்க்க வேண்டும். இதுதொடர்பாக நாங்களும் சில தகவல்களை மத்திய அரசுக்கு அளித்துள்ளோம்.

தற்போது மத்திய அரசின் கீழ் இயங்கும் இந்திய விலங்குகள் நல வாரியம், பீட்டா, புளூ கிராஸ் உள்ளிட்ட அமைப்புகள் ஜல்லிக்கட்டு உள்ளிட்டவற்றை எதிர்க்கின்றன. இதன்மூலம் தமிழகத்தின் பாரம்பரிய காளை இனங்கள் அழிந்துபோகும் நிலை உள்ளது.

விலங்குகள் நல வாரியம் தற்போது பன்னாட்டு நிறுவனங் களின் பிடியில் உள்ளது. பீட்டா இந்தியா அமைப்பின் தலைமைப் பொறுப்பில் அமெரிக்காவை சேர்ந்த ஒருவர் உள்ளார். அவருக்கு இந்திய பாரம்பரிய காளைகள் குறித்து தெரிய வாய்ப்பில்லை. இருந்தும் அவர் கள் எதிர்க்கின்றனர்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அறம் அறக்கட்டளை நிறு வனர் பாலகுமார் சோமு கூறும்போது, ‘‘இந்த தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் பல பன்னாட்டு நிறுவனங்களின் கீழ் செயல்படுகின்றன. பன்னாட்டு நிறுவனங்கள் அளிக்கும் சினை ஊசிகள் காளைக் கன்றுகளை உருவாக்காது. பால் பொருட் களுக்காக பசுக்களை மட்டுமே உருவாக்கக் கூடியவை. இந்த நிலை நீடித்தால், முழுமையாக நம் காளை இனமே அழிந்து விடும். தற்போது விதைக்காக வெளிநாட்டை எதிர்பார்ப்பது போல, பால், பால் பொருட்கள், சினை ஊசிக்காகவும் அவர்களை சார்ந்திருக்கும் நிலை ஏற்படும்’’ என்றார்.

இந்திய பல்லுயிர் பாதுகாப்பு கவுன்சிலின் மேலாண்மை அறங் காவலர் கார்த்திகேய சிவசேனா பதி பேசும்போது, மிருகவதை தடுப்பு சட்டத்தில் சேர்க்க வேண்டிய திருத்தங்கள் தொடர் பான கடிதத்தை 4 நாட்களுக்கு முன்பு பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பியதாக தெரிவித்தார்.

SCROLL FOR NEXT