தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு தொகுதி- 4 எழுதுபவர்களுக்கான இலவச பயிற்சி, திருவள்ளூரில் இன்று தொடங்குகிறது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வா ணையம் தொகுதி-4ல் உள்ளடங்கிய, இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், வரித்தண்டலர், நில அளவர், வரைவாளர் ஆகிய 4,963 பதவிகளுக்கு உரியவர்களை தேர்வு செய்ய உள்ளது. இதற்கான எழுத்துத் தேர்வு வரும் டிசம்பர் 21-ம் தேதி நடக்க உள்ளது. எனவே, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு தொகுதி-4- எழுதுபவர்களுக்கு, திருவள்ளூர் மாவட்டத்தில், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், திருவள்ளூர் தன்னார்வ பயிலும் வட்டம் மூலம் நடத்தும் இலவச பயிற்சி வகுப்பு இன்று தொடங்குகிறது.
திருவள்ளூர் பஸ் நிலையம் அருகில் உள்ள ஞானவித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் தொடங்கும் இந்த பயிற்சி வகுப்பு, இன்று முதல், டிசம்பர் 15-ம் தேதி வரை ( சனி, ஞாயிறு தவிர), காலை 10 மணி முதல், மாலை 5 மணிவரை நடக்க உள்ளது.
எனவே, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு தொகுதி-4க்கு விண்ணப்பித்தவர்கள் உரிய ஆதாரங்களுடன் பயிற்சி வகுப்பில் பங்கேற்று பயன் பெறலாம்.
மேலும், போட்டி தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள், திருவள்ளூர் மாவட் டத்தில் உள்ள கடம்பத்தூர், திருவள் ளூர், திருத்தணி, பூண்டி, வில்லிவாக்கம், திருவாலங்காடு, சோழவரம், எல்லாபுரம், ஆர்.கே. பேட்டை, புழல், பள்ளிப்பட்டு, கும்மிடிப்பூண்டி, பொன்னேரி மற்றும் பூந்தமல்லி ஆகிய ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் இயங்கும் தன்னார்வ பயிலும் நூலகங்களில் உள்ள போட்டித் தேர்வுக்கான புத்தகங்களை பயன்படுத்திக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தெரிவித்துள்ளது.