தமிழகம்

‘தி இந்து’-எஸ்கேஆர் பொறியியல் கல்லூரி இணைந்து நடத்திய ‘இனிது இனிது தேர்வு இனிது’ விழா: காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் மாணவர்களுக்கு அறிவுரை

செய்திப்பிரிவு

'எதிர்காலத்தின் அடித்தளம் 12-ம் வகுப்புத் தேர்வு'

‘மாணவர்களின் எதிர்கால வாழ்க் கைக்கு மிக முக்கிய அடித்தளமாக அமைந்துள்ளது 12-ம் வகுப்பு தேர்வு’ என்று காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் சவுரிராஜன் தெரிவித்தார். ‘தி இந்து’ தமிழ் நாளிதழ் மற்றும் எஸ்.கே.ஆர். பொறியியல் கல்லூரி ஆகியவை இணைந்து 12-ம் வகுப்பு மாண வர்களுக்காக ‘இனிது இனிது தேர்வு இனிது’ என்ற மாணவர் வழிகாட்டி நிகழ்ச்சியை, காஞ்சிபுரம் நகரில் உள்ள அண்ணா அரங்கத்தில் நேற்று நடத்தின. இதில், ஏராள மான மாணவ, மாணவிகள் உற்சாக மாகக் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்ச்சிக்கு எஸ்.கே.ஆர். பொறியியல் கல்லூரியின் தலைவர் ராமதாஸ் மற்றும் இயக்குநர் சுகந்தி ஆகியோர் தலைமை தாங்கினர். சிறப்பு விருந்தினர்களாக காஞ்சி புரம் மாவட்ட வருவாய் அலுவலர் சவுரிராஜன் மற்றும் இசைக்கவி ரமணன், காஞ்சிபுரம் மாவட்ட கல்வி அலுவலர் கற்பகவள்ளி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சவுரிராஜன் பேசிய தாவது: போட்டித் தேர்வுகள், பல் வேறு உயர் கல்வி மற்றும் நம் வாழ்க்கையின் எதிர்கால வளர்ச்சி போன்றவைக்கு 12-ம் வகுப்பு தேர்வின் மதிப்பெண்கள் அடித்தள மாக அமைகின்றன. அதே நேரத் தில் மதிப்பெண்களை மட்டுமே நோக்கமாக கொண்டு படிக்காமல், புரிந்து படிக்க மாணவர்கள் முன் வரவேண்டும்.

தற்போது, மாணவர்களுக்கு தேவையான அனைத்து கல்வி வசதிகளையும் பள்ளிகளிலேயே அரசு ஏற்படுத்தியுள்ளது. ‘தி இந்து’ தமிழ் போன்ற நாளிதழ்கள், எஸ்.கே.ஆர். பொறியியல் கல் லூரி போன்ற நிறுவனங்கள் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு இதுபோன்ற நிகழ்ச்சிகளை நடத்தி வருவது பாராட்டுக்குரியது என்று அவர் பேசினார்.

‘இனிது இனிது தேர்வு இனிது’ மாணவர் வழிகாட்டி நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவிகள்.

காஞ்சிபுரம் மாவட்ட கல்வி அலுவலர் எஸ்.கற்பகவள்ளி பேசும் போது, ‘12-ம் வகுப்புத் தேர்வுக் காக மாணவர்கள் தங்களை மகிழ்ச்சியாக தயார் படுத்திக் கொள்ள வேண்டும். மகிழ்ச்சியு டன் படித்தல் மற்றும் தேர்வு எழுது வதினால் நல்ல மதிப்பெண்களைப் பெற முடியும். உழைத்தாலே உயர்வு என்பது போல், நன்கு புரிந்து படித்தாலே வாழ்க்கையில் உயர முடியும்’ என்றார்.

இதைத் தொடர்ந்து, இசைக்கவி ரமணன் மாணவர்களிடையே பேசிய தாவது: மாணவர்கள் இளமை காலத்தில் கஷ்டப்பட்டு உழைப்பத னாலும் படிப்பதினாலும் மட்டுமே வாழ்க்கையில் உயர முடியும். தேர்வு நேரத்தில் உடலைத் தூய்மை யாகவும் மனதை தெளிவாகவும் வைத்துக்கொள்ள வேண்டும். இதன்மூலம், புத்துணர்ச்சியாக செயல்பட முடியும்.

தாய்மொழியை கட்டாயம் கற்க வேண்டும். ஏனென்றால், தாய் மொழியை கற்றால் மட்டுமே, பிறமொழிப் பாடங்களை எளிதாக கற்க முடியும். இதை பெற்றோர் உணர்த்த வேண்டும். நமது நாட்டின் பாரம்பரிய விருந்தோம்பல்களை மாணவர்கள் கடைபிடிக்க வேண் டும். பெற்றோர் ஒத்துழைப்பு அளித்து உற்சாகப்படுத்த வேண் டும்.

இதன்மூலம், பொது அறிவு சிந்தனைகள் வளர்ந்து, கல்வி யறிவுக்கு அடித்தளமாக அமையும் என்று அவர் பேசினார். தொடர்ந்து, தேர்வு பயம் மற்றும் பாடங்களை எவ்வாறு புரிந்து படிக்க வேண்டும் போன்றவை தொடர்பாக மாணவர்கள் மற்றும் பெற்றோர் எழுப்பிய கேள்வி களுக்கு நகைச்சுவையாக பதில் அளித்து பேசினார். பின்னர், வித்யா கல்வி மைய இயக்கு நர் எஸ்.பி.சுப்ரமணியன் சிறப்புரை யாற்றினார்.

இதையடுத்து, 12-ம் வகுப்பு தேர்வு எழுத உள்ள மாணவர் களுக்கு பாட நுணுக்கங்கள் மற்றும் தேர்வுகளுக்கு தயார் படுத்திக்கொள்வது தொடர்பாக பேராசிரியர்கள் திருமாறன், பரீத் அஸ்லாம், குமாரவேல், மணிமாறன் ஆகியோர் பேசினர். இதைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு 12-ம் வகுப்பு தேர்வில் 1,188 மதிப்பெண் பெற்று காஞ்சிபுரம் மாவட்ட அளவில் 2-ம் இடம் பிடித்த தேவி மற்றும் 1,186 மதிப்பெண் பெற்று 3-ம் இடம் பிடித்த பிரவீன் ஆகியோர் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை எதிர் கொள்வது குறித்து மாணவர் களுக்கு ஆலோசனைகள் வழங்கினர்.

எஸ்.கே.ஆர் கல்லூரியின் செய லாளர் சுரேஷ்பாபு நன்றியுரை யாற்றினார். நிகழ்ச்சியில் பங்கேற்ற சிறப்பு விருந்தினர்களுக்கு நினை வுப் பரிசுகள் வழங்கி கவுரவிக் கப்பட்டது. சென்னை அகாடமி ஆஃப் ஆர்க்கிடெக்சர் அண்ட் டிசைன் (கேட்) நிறுவனம் மற்றும் ‘அச்சீவர்ஸ்’ போட்டித் தேர்வு பயிற்சி மையம் ஆகியவை நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தன. காஞ்சிபுரம் ‘மை’ டிவியில் நிகழ்ச்சி நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.

SCROLL FOR NEXT