தமிழகத்தில் சுற்றுச்சூழல் கல்வி மற்றும் விழிப்புணர்வில் ஈடுபட்டு வரும் நிறுவனங்கள் மற்றும் தனி நபர் ஆகியோர் தமிழக அரசின் சுற்றுச்சூழல் விருது பெற விண்ணப்பிக்கலாம்.
இது தொடர்பாக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், ''தமிழகத்தில் சுற்றுச்சூழல் கல்வி மற்றும் விழிப்புணர்வு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மேலாண்மை மற்றும் ஆராய்ச்சி பணிகளில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டு சிறப்பாக பணியாற்றி வரும் கல்வி நிறுவனங்கள், தனி நபர், தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு 2015-ம் ஆண்டின் ‘சுற்றுச்சூழல் விருது’ வழங்கி கவுரவிக்க தமிழக அரசு உத்தேசித்துள்ளது.
இவ்விருதை பெற விரும்பும் தனி நபர் மற்றும் கல்வி மற்றும் தொண்டு நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம். விருதுக்கான படிவங்களை. இயக்குநர், சுற்றுச்சூழல் துறை, தரை தளம், பனகல் மாளிகை, சைதாப்பேட்டை, சென்னை- 600 015 என்ற முகவரியில் ஜூன் 20 முதல் ஜூலை 18 வரை அனைத்து பணி நாட்களிலும் காலை 10 முதல் மாலை 5 நேரில் பெற்றுக்கொள்ளலாம்.
மேலும் >www.environment.tn.nic.in என்ற இணையதளத்திலும் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை ஜூலை 20-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 044- 24336421 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.