தமிழகம்

நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் நடித்து காட்டிய ராம்குமார்: தப்பி சென்ற வழியையும் காட்டினார்

ஆர்.சிவா

நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதியை கொலை செய்த விதம் குறித்து ராம்குமார் போலீஸார் முன்னிலையில் நடித்து காட்டினார்.

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த 24-ம் தேதி காலையில் ஐடி பெண் ஊழியர் சுவாதி(24) வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் நெல்லை மாவட்டம் செங்கோட் டையை சேர்ந்த ராம்குமார்(24) கைது செய்யப்பட்டார். பின்னர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

ராம்குமாரிடம் போலீஸ் காவலில் 3 நாட்கள் விசாரணை நடத்த எழும்பூர் நீதிமன்றம் அனுமதி கொடுத்தது. 13-ம் தேதி மாலை முதல் 15-ம் தேதி மாலை வரை நுங்கம்பாக்கம் காவல் நிலையத் தில் ராம்குமாரிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். பின்னர் அவர் மீண்டும் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

நடித்து காட்டினார்

ராம்குமாரிடம் போலீஸ் காவலில் நடத்தப்பட்ட விசாரணை குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, "ராம்குமாரை போலீஸ் காவலில் எடுத்த 13-ம் தேதி நள்ளிரவில் ராம்குமாரை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத் துக்கு அழைத்து சென்றோம். பயணிகள் மற்றும் பொதுமக்கள் நடமாட்டம் இல்லாத நேரம், மிக முக்கியமாக தொலைக்காட்சி கேமராமேன்கள் இல்லாத நேரத்தை கவனமாக பார்த்து நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்துக்கு ராம்குமாரை அழைத்து சென்றோம்.

சுவாதி கொலை செய்யப்பட்ட நாளில் ரயில் நிலையத்துக்குள் ராம்குமார் எந்த வழியாக வந்தார், சுவாதியை எவ்வளவு தூரத்தில் வைத்து பார்த்தார், சுவாதியின் அருகே சென்று அவரை எப்படி வெட்டினார், எத்தனை முறை வெட் டினார், பின்னர் அரிவாளுடன் நடைமேடையில் எந்த வழியாக ஓடினார், அரிவாளை எந்த இடத்தில் வைத்து தூக்கி எறிந்தார், ரயில் நிலையத்தில் இருந்து சுவர் ஏறி குதித்து வெளியே வந்தது, பின்னர் அவர் தப்பி சென்ற தெருக்கள் போன்றவற்றை ராம்குமார் நடித்து காட்டினார். இவை அனைத்தையும் நாங்கள் வீடியோ எடுத்து வைத்து இருக்கிறோம்.

கொலை நடந்த விதத்தை அப்படியே எழுதி குற்றப்பத்தி ரிகை தாக்கல் செய்வதற்கும், கொலை நடந்த விதத்தில் இருக் கும் சந்தேகங்களை தெளிவு படுத்துவதற்கும், நடித்து காட்ட வைப்பது அவசியமாகிறது.

கொலைக்காக வருத்தம்

சுவாதியை கொலை செய்து விட்டு கொலையாளி தப்பிச் செல் லும் காட்சிகள் 3 கண்காணிப்பு கேம ராக்களில் தெளிவாக பதிவாகி இருந் தன. அந்த காட்சிகளில் இருக்கும் நப ரும், ராம்குமாரும் ஒரே நபர்தான் என்பதை ஆய்வக சோதனை மூலம் உறுதி செய்து இருக்கிறோம். அந்த அறிக்கை விரைவில் வந்துவிடும். ராம்கு மார் அதிகமாக பேசுவ தில்லை. கேட்கும் கேள்விகளுக்கு மட்டும் பதில் அளிப்பார். ‘சுவாதியை ஆத்திரத்தில் வெட்டிக் கொன்று விட்டேன். ஆனால் இப்போது அதை நினைத்தால் வருத்தமாக இருக்கிறது’ என்றுகூறி ராம்குமார் அழுதார்" என்றார்.

SCROLL FOR NEXT