தமிழகம்

இலங்கை கடற்படையினரால் 70 இந்திய மீனவர்கள் கைது

செய்திப்பிரிவு

காரைக்கால் மற்றும் நாகப்பட்டினத்தைச் சேர்ந்த இந்திய மீனவர்கள் 70 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

இலங்கை அதிகாரத்தின் கீழ் வரும் கடற்பகுதியில் மீன்பிடிததாகக் கூறி, 70 மீனவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை அதிகாரிகளிடம் இருந்து இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டதாக, மீன்வளத் துறை இணை இயக்குனர் சுப்புராஜ் குறிப்பிட்டுள்ளார்.

சமீப காலமாக, இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படும் தமிழக மீனவர்களின் எண்ணிக்கை மிகுதியாகியுள்ளது. இலங்கை சிறையில் தமிழகத்தைச் சேர்ந்த 65 மீனவர்கள் ஏற்கெனவே அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பாக, மத்திய அரசுக்கு தமிழக அரசு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT