சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையை விரிவாக்கம் செய்ய மத்திய அரசு ரூ.10,000 கோடி ஒதுக்கியுள்ளது என மத்திய இணை அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன் தெரிவித்தார்.
திண்டுக்கல் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், கோவை - பொள்ளாச்சி இடையே நடந்துவரும் நான்கு வழிச்சாலை விரிவாக்கப் பணிகளை பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று ஆய்வு செய்தார்.
பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, ‘4 வழிச்சாலை பணியால் கோவை ஈச்சனாரி விநா யகர் கோயில் பாதிக்கப்படாது. மேம்பாலம் அமைத்து கோயி லுக்கு பாதிப்பு இல்லாமல் சாலை அமைக்கப்படும்.
தமிழகத்தில் சாலை மேம்பாடு மற்றும் விரிவாக்கப் பணிகளுக்கு ரூ.60,000 கோடி வரை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. சென்னை கிழக்கு கடற்கரை சாலைக்கு ரூ.10,000 கோடி ஒதுக்கப்பட்டுள் ளது. தமிழக முதல்வரை விரை வில் சந்தித்து கிழக்கு கடற்கரை சாலை விரிவாக்கப் பணிகள் தொடர்பாக பேசப்படும். இந்த சாலை விரிவாக்கம் செய்யும் போது, அது மிக முக்கியமான பொருளாதார சாலையாக உரு வெடுக்கும்.
புறந்தள்ளப்பட்ட கிழக்கு மாவட்ட மக்கள் வசிக்கும் பகுதிகளில் புதிய தொழில்கள் உருவாகவும், அவர்களது வாழ்வில் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கவும் இந்த சாலை விரிவாக்கம் உதவும்.
முதல்வர் எடப்பாடி பழனி சாமி, ஏற்கெனவே சாலைப் போக்குவரத்து துறையில் இருந்ததால், கிழக்கு கடற்கரை சாலை விரிவாக்கத்தின் அவசியம் அவருக்குத் தெரியும். இத்திட்டத்துக்கு மாநில அரசு ஒத்துழைப்பு கொடுக்காவிட்டால், மத்திய அரசு திட்டங்களை மாநில அரசு புறந்தள்ளுவதாக எடுத்துக்கொள்ள வேண்டியிருக் கும்’ என்றார்.