ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றுள்ள நளினி வேலூர் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
தனது மகளின் திருமண ஏற்பாடு களுக்காக சென்னை புழல் சிறைக் குத் தன்னை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, கடந்த 13-ம் தேதி முதல் நளினி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார்.
இந்நிலையில் அதிகாரிகள் கேட்டுக் கொண்டதற் கிணங்க நளினி தனது உண்ணா விரதப் போராட்டத்தை கைவிட்டார்.