தமிழகம்

உணவு ஒவ்வாமையால் பாதிப்பு: அரசு பாலிடெக்னிக் மாணவிகள் 75 பேர் கோவை மருத்துவமனையில் அனுமதி

செய்திப்பிரிவு

கோவை பாப்பநாயக்கன் பாளையம் பகுதியில் அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி செயல்படு கிறது. இக்கல்லூரியில் சுமார் 930 மாணவிகள் பயின்று வருகின்றனர் இவர்களில், 180 பேர் விடுதியில் தங்கி உள்ளனர்.

விடுதி மாணவிகளில் 30 பேர் நேற்று முன்தினம் மாலை திடீரென வாந்தி எடுத்து மயக்கமடைந்தனர். இதையடுத்து, அவர்கள் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத் துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இரவு உணவுக்குப் பின்னர் மேலும் 20 மாணவிகளும், நேற்று காலை 25 மாணவிகளும் உடல்நலம் பாதிப்படைந்து மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டனர்.

இதை அறிந்த மாவட்ட ஆட்சி யர் த.ந.ஹரிஹரன், மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட மாணவிகளை நேற்று பார்த்து ஆறுதல் கூறினார்.

வாந்தி, மயக்கம்

மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்ட மாணவிகள் கூறியதா வது: விடுதியில் நேற்று முன்தினம் மதியம் பருப்பு சாதம் வழங்கப்பட் டது. உணவுக்குப் பின்னர் தலை சுற்றல், வாந்தி, மயக்கம் ஏற்பட் டது. நேற்று முன்தினமும், நேற் றும் மேலும் சில மாணவிகள் உடல்நலம் பாதிக்கப்பட்டு அனு மதிக்கப்பட்டுள்ளனர்.

தண்ணீரில்தான் பிரச்சினை ஏற்பட்டிருக்கும் என்று சந்தேகிக் கிறோம். கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன்னரும் இதேபோல் உணவு, தண்ணீரில் பிரச்சினை ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளனர் என்றனர்.

ஒரு வாரம் விடுமுறை

அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் ஏ.செல்லதாயி கூறும்போது, ‘எதனால் பிரச்சினை ஏற்பட்டது என்பது சரியாகத் தெரியவில்லை. விசாரணை நடக்கிறது. சென்னையில் உள்ள கல்வித்துறை அதிகாரிகளிடம் தகவல் கொடுத்துள்ளோம். தற்போதைய நிலையில் கல்லூரிக்கு ஒரு வாரம் விடுமுறை அளித்துள்ளோம்’ என்றார்.

இதனிடையே, சம்பந்தப்பட்ட விடுதியில் சுகாதாரத் துறை இணை இயக்குநர் தமிழ்மணி தலைமையிலான அதிகாரிகள் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.

SCROLL FOR NEXT