புதுக்கோட்டை மாவட்டம் ஆவூர், மூக்கம்பட்டி, காக்காபெருமேடு மற்றும் அரியலூர் மாவட்டம் கரைவெட்டி நேற்று நடைபெற்ற ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டில் காளைகள் முட்டி 146 பேர் காயமடைந்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆவூரில் மாவட்ட ஆட்சியர் சு.கணேஷ் தலைமையில் நடை பெற்ற ஜல்லிக்கட்டை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தொடங்கி வைத் தார். இதில், புதுக்கோட்டை உள் ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 631 காளைகள் அவிழ்த்து விட்டப்பட்டன. இவற்றை அடக்க களமிறங்கிய 185 மாடுபிடி வீரர்களில் 41 பேர் காளைகள் முட்டியதில் காயமடைந்தனர்.
இதேபோல, மூக்கம்பட்டியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 825 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. 250 மாடுபிடி வீரர்கள் களம் இறங்கினர். இதில், காளைகள் முட்டியதில் 30 பேர் காயம் அடைந்தனர். இரு இடங்களிலும் நடைபெற்ற ஜல்லிக்கட்டுக்கான பாதுகாப்பு பணிகளை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஜெ. லோகநாதன் தலைமையிலான போலீஸார் மேற்கொண்டனர்.
2 போலீஸார் காயம்
பொன்னமராவதி அருகே காக்காபெருமேடு பகுதியில் நேற்று நடைபெற்ற மஞ்சுவிரட்டில் 500-க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. இதில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சார்லஸ், செந்தில் ஆகிய 2 போலீஸார் உட்பட 10 பேர் காயமடைந்தனர்.
அரியலூர் மாவட்டத்தில்…
அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகேயுள்ள கரைவெட்டி கிராமத் தில் நேற்று ஜல்லிக்கட்டு நடை பெற்றது. இதில், திருச்சி,பெரம் பலூர், அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட பல் வேறு பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட 400 காளை கள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டன.
காளைகளை அடக்க 150 வீரர்கள் களத்தில் அனுமதிக்கப்பட்டனர். இதில், காளைகள் முட்டியதில் 65 பேர் காயமடைந்தனர். பலத்த காயமடைந்த கரைவெட்டி பரதூ ரைச் சேர்ந்த பிச்சைப் பிள்ளை (56), பூண்டியைச் சேர்ந்த முருகேசன் (64), சன்னாவூரைச் சேர்ந்த மாயதேவன்(50), இலந்தைக் கூடத்தைச் சேர்ந்த செல்வ மணி (36), திருச்சி காட்டூரைச் சேர்ந்த அப்பாஸ் (29), வெங்கனூரைச் சேர்ந்த மார்கண் டன்(29) ஆகியோர் தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டுள்ளனர்.