கர்நாடக அணைகளின் நீர் இருப் பைக் கணக்கீடு செய்து உண்மை நிலவரத்தை வெளிக்கொண்டுவர முதல்வர் குரல் கொடுக்க வேண் டும் என்று அனைத்து விவசாயி கள் சங்க கூட்டமைப்பின் ஒருங் கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்தார்.
கர்நாடக அரசை கண்டித்து வரும் 30-ம் தேதி அனைத்து விவசாயிகள் சங்க கூட்டமைப்பு சார்பில் நடைபெறும் சாலை, ரயில் மறியல் போராட்டம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் தஞ்சாவூரில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் திமுக, காங்கிரஸ், திராவிடர் கழ கம், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மனித நேய மக்கள் கட்சி, மனித நேய ஜனநாயக கட்சி நிர்வாகி கள், விவசாய அமைப்புகளைச் சேர்ந்தோர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் அனைத்து விவசாயிகள் சங்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண் டியன் பேசியபோது, “மத்திய நீர் வள அமைச்சகம் 2 தினங் களுக்கு முன்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் குடிநீர் ஆதாரம் 33 சதவீதம் குறைந்து விட்டதாகத் தெரிவித்துள்ளது. இதற் குக் காரணம் நாம் தண்ணீரை சேமித்து வைக்காததுதான். அதே போல, கர்நாடக அரசு நமக்கு உரிய நேரத்தில் காவிரியில் தண்ணீர் விட்டிருந்தால் குடிநீர் பிரச்சினையும் வந்திருக்காது. இப் போது காவிரி டெல்டா மாவட்டங் களில் பாசனம் கேள்விக்குறியாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
காவிரி நீர் பிரச்சினை தற்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளது. காவிரியில் நமக்கு உரிய தண் ணீரை பெற தமிழக முதல்வர் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். மத்திய நீர்வள அமைச்சக செயலாளர் மூலம் கர்நாடக அணைகளின் நீர் இருப்பைக் கணக்கீடு செய்து உண்மை நிலவரத்தை வெளிக் கொண்டுவர முதல்வர் குரல் கொடுக்க வேண்டும்.
சிறுவாணி அணையில் கேரள அரசு அணை கட்டுவதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். ஏற்கெனவே, கர்நாடக அரசு கபினிக்கு மேற்குப் பகுதி யில் 20 டிஎம்சி கொண்ட நீர்த் தேக்கத்தைக் கட்டியுள்ளது. ஆந்திர அரசு பாலாற்றில் பல தடுப்பணை களைக் கட்டி வருகிறது. இதை யெல்லாம் தடுத்து நிறுத்தி, தமிழக விவசாயிகளின் உரிமையை மீட்டெடுக்க வேண்டும். வரும் 30-ம் தேதி தமிழகம் முழுவதும் நடைபெற உள்ள போராட் டத்துக்கு அனைத்து அரசியல் கட்சியினரும் ஆதரவளிக்க வேண்டும் என்றார்.
கூட்டத்தில், கர்நாடக அரசைக் கண்டித்து வரும் 30-ம் தேதி விவசாயிகள் சங்கம் சார்பில் நடைபெற உள்ள போராட்டத்தில் தஞ்சை மாவட்டத்தில் அனைத்து வணிக நிறுவனங்களையும் அடைத்து விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிப்பது. தஞ்சை மாவட்டத்தில் வட்டத்துக்கு ஒரு இடத்தில் சாலை மறியலிலும், தஞ்சாவூர், கும்பகோணத்தில் ரயில் மறியல் போராட்டத்திலும் ஈடுபடுவது என முடிவு செய் யப்பட்டது.