நல்ல காரணத்துக்காக அமையும் கூட்டணியில் சேருவதில் தயக்கம் இல்லை என்று தி.மு.க.தலைவர் மு.கருணாநிதி தெரிவித்துள்ளார்.
மேலும், நாடாளுமன்ற தேர்தலில் 3-வது அணி அமைப்பது பற்றி தி.மு.க. பொதுக்குழுதான் முடிவு செய்யும் என்றார். சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய கருணாநிதி இதனை தெரிவித்தார்.
வரும் 30ம் தேதி 3வது அணி அமைப்பது குறித்து ஆலோசிக்க டெல்லியில் கூடுகின்ற கூட்டத்திற்கு திமுகவுக்கு இதுவரையில் அழைப்பு வரவில்லை. இந்தியாவின் நன்மைக்காக எந்த அணி அமைந்தாலும் அந்த அணியை திமுக வரவேற்கும் என்றும் கூறினார்.
இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக்கூடாது என்று தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதை தான் வரவேற்பதாகவும் தெரிவித்தார்.
முதல்வர் தொடங்கி வைத்த அரசு பஸ்களில் இரட்டை இலைச்சின்னம் பொறிக்கப்பட்டுள்ளதாக தி.மு.க. தலைவர் கருணாநிதி குற்றம்சாட்டினார்.