தமிழகம்

திருச்சியில் திமுக மாநில மாநாடு தொடங்கியது

செய்திப்பிரிவு

திருச்சியில் திமுகவின் 10-வது மாநில மாநாடு தொடங்கியது. மாநாட்டை திமுக தலைவர் கருணாநிதி கொடியேற்றி தொடங்கி வைத்தார்.

90 அடி உயரத்திற்கு அமைக்கப்பட்டிருந்த கொடிக்கம்பத்திற்கு மறைந்த ராமஜெயம் (முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ) பெயர் சூட்டப்பட்டிருந்தது.

மாநாட்டில் வரவேற்புரையாற்றிய திருச்சி திமுக மாநிலச் செயலாளர் நேரு, இந்த மாநாடு, வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக தனித்துப் போட்டியிடும் என பொதுக்குழுவில் எடுத்த முடிவு சரியானது என்பதை நிரூபிக்கும் என்றார்.

கூட்டணி கட்சித் தலைவர்கள் நாளை இரவு மாநாட்டில் உரையாற்ற உள்ளனர்.

SCROLL FOR NEXT