தமிழகம்

தனி நபர்களின் 27 துப்பாக்கிகள் காவல் நிலையங்களில் ஒப்படைப்பு

செய்திப்பிரிவு

ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலை அமைதியாக நடத்தும் நடவடிக்கையாக இத்தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் தனி நபர்கள். தங்களிடம் உள்ள 27 துப்பாக்கிகளைக் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் பலத்த போட்டி நிலவுவதால் தேர்தலை அமைதி யான முறையில் நடத்த இந்திய தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. காவல்துறைக்கும் பல அறிவுறுத்தல்களை வழங்கி யுள்ளது. அதன்படி குற்றப் பின்னணி கொண்ட பலர் கைது செய்யப்பட்டிருப்பதுடன், அந்த தொகுதியில் தனி நபர்கள் வைத் துள்ள துப்பாக்கிகளும் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள் ளன.

தேர்தலை அமைதியாக நடத்தும் விதமாக, ஆர்.கே.நகர் தொகுதியில் காவல்துறை மேற் கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து வண்ணாரப்பேட்டை துணை காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் கூறும்போது, “இதுவரை அனுமதியின்றி போஸ் டர் ஒட்டியது, கொடி பிடித்தது தொடர்பாக பல்வேறு கட்சிகள் மீது 24 வழக்குகள் பதிவு செய்யப்பட் டுள்ளன. மதுபானங்களை விற்ற தாகவும் வழக்குப் பதிவு செய்யப் பட்டுள்ளது.

மேலும் குற்றப் பின்னணி கொண்ட 36 பேரை முன்னெச்சரிக்கை நடவடிக்கை யாக கைது செய்துள்ளோம். பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டு, பிடிபடாமல் இருந்த 96 குற்றவாளி களைக் கைது செய்துள்ளோம். 117 பழைய குற்றவாளிகளிடமிருந்து தேர்தலில் அசம்பாவித செயல்களில் ஈடுபட மாட்டோம் என நன்னடத்தை உறுதிமொழி சான்று பெற்றுள்ளோம். மேலும் தொகுதியில் தனி நபர்கள் வைத்திருந்த 33 துப்பாக்கிகளில், 27 துப்பாக்கிகள் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. மீதம் உள்ள 6 துப்பாக்கிகளில் 2 துப்பாக்கிகள் விளையாட்டு பயிற்சிக்கு, 4 துப்பாக்கிகள் வங்கி பாதுகாப்பு பணிகளுக்கானது என்பதால், அவற்றுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது” என்றார்.

SCROLL FOR NEXT