தமிழகம்

தருமபுரி சம்பவத்தில் அரசு பாராமுகம் கண்டிக்கத்தக்கது: மு.க.ஸ்டாலின்

செய்திப்பிரிவு

தருமபுரி சம்பவத்தில் தமிழக அரசு பாராமுகமாக செயல்படுவது கண்டிக்கத்தக்கது என திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது, "தருமபுரி சம்பவத்தில் தமிழக அரசு பாராமுகமாக செயல்படுவது கண்டிக்கத்தக்கது. மேலும் சம்பவம் தொடர்பாக சுகாதார அமைச்சர் கூறியிருக்கும் விளக்கம் ஏற்புடையதல்ல. அது பொறுப்பற்ற பதிலாகும்.

இவ்விவகாரத்தில் அரசு துரிதமாக செயல்பட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். எதிர்காலத்தில் இதுபோன்ற துயரச்சம்பவங்கள் நிகழாத வகையில் சுகாதார வசதிகளை அரசு மேம்படுத்த வேண்டும்" என்றார்.

கடந்த 14-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை தருமபுரை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 11 பச்சிளங் குழந்தைகள் பலியாகின.

SCROLL FOR NEXT