மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் பருவமழை நோய் தடுப்பு நடவடிக்கைகளை விரைவு படுத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிவுறுத்தினார்.
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் கீழ் செயல்பட்டுவரும் பல்வேறு துறைகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் நேற்று நடந்தது. துறையின் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் நடந்த கூட்டத்தில், துறையின் செயலர் க.பனீந்திர ரெட்டி, குடிநீர் வாரிய மேலாண் இயக்குநர் விக்ரம் கபூர், நகர்ப்புற உட்கட்டமைப்பு நிதிசேவைகள் நிறுவன மேலாண் இயக்குநர் டேவிதார், நகராட்சி நிர்வாக இயக்குநர் கோ.பிரகாஷ், பேரூராட்சிகள் இயக்குநர் மகர பூஷணம் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில், சென்னை பெருநகர மாநகராட்சி உட்பட 12 மாநகராட்சிகள், 124 நகராட்சிகள், 528 பேரூராட்சிகளில் நடந்து வரும் திட்டப்பணிகளின் முன்னேற்றத்தை ஆய்வு செய்தார். குறிப்பாக சாலைப்பணிகள், பாதாள சாக் கடைத் திட்டங்கள், குடிநீர் வழங்கல் பணிகள், மழைநீர் வடிகால் பணிகள், எல்இடி விளக்கு பொருத்துதல், திடக்கழிவு மேலாண்மை உள்ளிட்ட அனைத்து பணிகளையும் ஆய்வு செய்தார்.
அப்போது அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, ‘‘மழைநீர் வடி கால், பாதாள சாக்கடை திட்டம், குடிநீர் திட்டப்பணிகளை விரை வாக முடிக்க வேண்டும். பருவ மழையை முன்னிட்டு மாநகராட்சி கள், நகராட்சி மற்றும் பேரூ ராட்சி பகுதிகளில் நோய்த் தடுப்பு முன்னெச்சரிக்கை நட வடிக்கைகள் எடுக்க வேண்டும்” என அதிகாரிகளுக்கு அறிவுறுத் தினார்.