புதிய 1,000 ரூபாய் நோட்டுகளை உடனே வெளியிட வேண்டும் என திமுக வர்த்தக அணி மாநில நிர்வாகிகள், மாவட்ட அமைப் பாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திமுக வர்த்தக அணி நிர்வாகி கள் கூட்டம் அதன் மாநிலச் செய லாளர் கவிஞர் காசிமுத்து மாணிக் கம் தலைமையில் அண்ணா அறி வாலயத்தில் நேற்று நடைபெற்றது.
திமுக துணைப் பொதுச்செய லாளர் வி.பி.துரைசாமி, செய்தித் தொடர்பு இணைச் செயலாளர் தமிழன் பிரசன்னா, வர்த்தக அணி இணைச் செயலாளர் கிரகாம்பெல் உள்ளிட்டோர் கூட்டத்தில் பங் கேற்றனர்.
சிறு வியாபாரிகளும், நடுத்தர மக்களும் பாதிக்கப்படாத வகையில் 5 சதவீத சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) மட்டுமே விதிக்க வேண்டும், பல்வேறு குழப்பங்கள் இருப்பதால் புதிய 10 ரூபாய் நாணயங்களை திரும்பப் பெற வேண்டும், வங்கிகளில் ரூ.50 ஆயிரம் பணம் எடுக்கலாம் என்பதை வெறும் அறிவிப்பாக இல்லாமல் செயல்படுத்த வேண்டும், 1,000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இல்லாததால் வணிகர்கள் பெரும் சிரமங்களை அனுபவித்து வருகின்றனர். எனவே, இனியும் தாமதிக்காமல் புதிய 1,000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விட வேண்டும், மார்ச் 1-ம் தேதி திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை சிறப்பாகக் கொண்டாடுவது, சட்டப் பேரவையில் ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏ.க்கள் வலுக்கட் டாயமாக வெளியேற்றப்பட்டதற்கு கண்டனம் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.