தமிழகம்

தமிழகம் முழுவதும் விவசாயிகள் வங்கிக் கணக்கில் வறட்சி இழப்பீடு செலுத்தப்படும்

செய்திப்பிரிவு

வறட்சி தொடர்பாக விவசாயி களுக்கு வழங்கப்பட வேண்டிய இழப்பீடு ஒரே சமயத்தில் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத் தப்படும் என முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார்.

ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது முதல்வர் தன் பதிலுரையில் பேசியதாவது:

‘வார்தா’ புயலால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட் டங்கள் பெரிதும் பாதிப்புக்குள் ளாகின. புயலால் பாதிக்கப்பட்ட உட்கட்டமைப்புகளை சீரமைக்க, நிவாரணத் தொகை வழங்க ரூ.585.45 கோடி ஒதுக்கப்பட்டு, இதுவரை ரூ.498 கோடி செலவிடப் பட்டுள்ளது.

பருவ மழை குறைவு

தமிழகத்தின் அனைத்து பகுதி களிலும் வட கிழக்கு பருவமழை குறைவாக பெய்துள்ளதால், அனைத்து மாவட்டங்களும் வறட்சி யால் பாதிக்கப்பட்டவையாக அறி விக்கப்பட்டுள்ளன. அனைத்து மாவட்டங்களிலும் விவசாயிகள் செலுத்த வேண்டிய நிலவரி முழுவதும் தள்ளுபடி செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

மாநில பேரிடர் நிவாரண நிதி வார்தா புயல் நிவாரணத்துக்கு செலவழிக்கப்பட்டுள்ளது. இந் நிலையில் வறட்சி நிவாரணத்துக்கு தேவைப்படும் நிதி தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து கோரப்பட்டுள்ளது. தற்போது வறட்சி நிவாரணம் பெறும் வழிமுறைகளை மத்திய அரசு மாற்றி அமைத்துள்ளது. அதன்படி, கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டே, தமிழகம் வறட்சி பாதித்த மாநிலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, வறட்சி நிவாரண கோரிக்கை மனு தயாரிக்கப்பட்டு , மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மத்திய அரசிடம் இருந்து ரூ.39 ஆயிரத்து 565 கோடி நிதி கோரப்பட்டுள்ளது. மத்திய குழு ஆய்வு முடித் துள்ளது.

அந்த குழு ஆய்வறிக்கையை சமர்ப்பித்ததும் மத்திய அரசிடம் இருந்து நிதி கிடைக்கும் என நம்புகிறேன்.

அதே நேரம் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் பயிர்கள் புல எண் வாரியாக கணக்கெடுக்கப்பட்டு, அவர்களின் வங்கிக் கணக்கு விவரங்களும் சேகரிக்கப்பட்டு வருகின்றன. இப்பணிகள் விரை வில் முடிக்கப்பட்டு, இழப்பீடு ஒரே நேரத்தில் விவசாயிகள் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத் தப்படும்.

தொடர் நடவடிக்கை

இனி வரும் காலங்களில் இது போன்ற இயற்கை இடர்பாடு களால் பாதிக்கப்படும் விவசாயி களுக்கு தக்க பயிர்க் காப்பீட்டு திட்டத்தை மேலும் பரவலாக்க, அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுக்கும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT