அரை மணி நேரம் காத்திருந்தும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்திக்க முடியவில்லை என திமுக செயல் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
நேற்று காலை தலைமைச் செயலகத்துக்கு வந்த அவர், மானியக் கோரிக்கை விவாதத் துக்காக சட்டப்பேரவையை கூட்ட வேண்டும் என பேரவைத் தலைவர் பி.தனபாலிடம் மனு அளித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் ஸ்டாலின் கூறியதாவது:
கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு தமிழக அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முடிந்ததும் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடத்தப்படும் என முடிவெடுக்கப்பட்டது.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளதால் மானி யக் கோரிக்கை விவாதத்துக்காக உடனடியாக சட்டப்பேரவையை கூட்ட வேண்டும் என பிரதான எதிர்க் கட்சி என்ற முறையில் பேரவைத் தலைவரை நேரில் சந்தித்து மனு அளித்துள்ளோம்.
மானியக் கோரிக்கை விவாதத் துக்காக சட்டப்பேரவையை கூட்டுவது தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடமும் மனு அளிக்க முடிவு செய்திருந்தோம். அரை மணி நேரம் காத்திருந்தும் முதல்வரை எங்களால் சந்திக்க முடியவில்லை. முதல்வர் அழைக் காததால் மனுவை திமுக எம்எல்ஏக் களிடம் ஒப்படைத்து, முதல்வர் அழைக்கும்போது மனுவை அளிக்குமாறு கேட்டுக் கொண் டுள்ளோம்.
கோமா நிலையில் தமிழக அரசு
கடந்த 37 நாள்களாக டெல்லி யில் தமிழக விவசாயிகள் போராடி வருகின்றனர். இது குறித்து சட் டப்பேரவையில் விவாதித்து நல்ல முடிவு காண தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். தமிழகத்தில் குடிநீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. இது குறித்தும் சட்டப்பேரவையில் விவாதிக்க வேண்டும். இந்த ஆட்சி யில் ஒட்டுமொத்த அரசு நிர்வாக மும் ஸ்தம்பித்து கோமா நிலையில் உள்ளது.
அதிமுகவின் உள் விவகாரங் களில் தலையிட விரும்பவில்லை. மற்ற கட்சிகளின் உள் விவகாரங் களில் தலையிடுவது திமுகவின் மரபல்ல. ஆர்.கே.நகர் தேர்தல் பிரச்சாரத்தின்போது அதிமுகவின் இரு அணிகளின் ஊழல்களை எடுத்துக் கூறினேன். அது உண்மை என்பதை இப்போது அவர்களே ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். ஒன் றாக இருந்து நாட்டையே கொள்ளை யடித்தவர்கள், இப்போது இரண் டாகப் பிரிந்து நாட்டை குட்டிச் சுவராக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
தங்களது பிரச்சினைகளுக்கு தீர்வு காண கூடிக்கூடி பேசுகிறார் கள். ஆனால், போராடும் விவசாயி களை சந்திக்க மறுக்கிறார்கள். எதிர்க்கட்சித் தலைவரையே சந்திக்க மறுக்கும் முதல்வர், விவசாயிகளை எப்படி சந்திப்பார்?
மானியக் கோரிக்கை விவாதத் துக்காக சட்டப்பேரவையை கூட்டும் அதிகாரம் பேரவைத் தலைவருக் குத்தான் உள்ளது. ஆளுநருக்கு இல்லை. எனவேதான், பேரவைத் தலைவரிடம் மனு அளித்துள்ளோம்.