சென்னையில் வெள்ளிக்கிழமை முதல் மூன்றாவது நாளாக தொடர் மழை பெய்து வருகிறது. வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மழை பெய்கிறது.
கோடம்பாக்கம், தி.நகர், அடையார், மயிலாப்பூர், நுங்கம்பாக்கம், எழும்பூர், திருவொற்றியூர், மாதவரம், எண்ணூர், செங்குன்றம், கேளம்பாக்கம் உள்ளிட்ட பல இடங்களில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப்படி சென்னை நுங்கம்பாக்கத்தில் 19.1 மி.மீ., மீனம்பாக்கத்தில் 9.8 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
அடுத்த 2 நாட்களுக்கு மாலை அல்லது இரவு நேரத்தில் சென்னையில் கன மழை பெய்ய வாய்ப்புண்டு. பகல் நேரத்தில் நகரின் ஒரு சில இடங்களில் கன மழை பெய்யலாம்.