தமிழகம்

ஆர்.கே.நகரில் சமக வேட்பாளர் அறிவிப்பு

செய்திப்பிரிவு

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் எம்.அந்தோணி சேவியர் போட்டியிடுக் கிறார்.

இதுதொடர்பாக சமக தலைவர் சரத் குமார் நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி போட்டியிடுகிறது. கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் எம்.அந்தோணி சேவியரை வேட்பாளராக அறிவிக்கிறேன். வடசென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் ராயபுரம் கே.விஜயன் மாற்று வேட்பாளராக இருப்பார்’ என தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT