தமிழகம்

ராம்குமாருக்கு ஜாமீன் கேட்கப் போவதில்லை: வழக்கறிஞர் ராம்ராஜ் தகவல்

செய்திப்பிரிவு

சுவாதி கொலை வழக்கு தொடர் பாக கைதாகி, சிறையில் அடைக் கப்பட்டுள்ள ராம்குமாருக்கு ஜாமீன் கேட்கப் போவதில்லை என்று வழக்கறிஞர் எஸ்.பி.ராம்ராஜ் தெரிவித்துள்ளார்.

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த 24-ம் தேதி இன்ஜினீயர் சுவாதி (24) கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக திருநெல்வேலி மாவட் டம், செங்கோட்டையை அடுத்த மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த ராம் குமார் (24) என்பவர் கைது செய்யப் பட்டு, சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை நேற்று முன்தினம் காலை ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதியும், வழக் கறிஞருமான எஸ்.பி.ராம்ராஜ் சந் தித்து பேசினார்.

ராம்குமாருக்காக நீதிமன்றத்தில் ஆஜராகி வாதிட உள்ளதாக அவர் தெரிவித்திருக்கிறார். இவர், திரு நெல்வேலி மாவட்டம், வாசுதேவ நல்லூர் அருகே ஆற்றுவழி கிரா மத்தை பூர்வீகமாகக் கொண்டவர்.

ராம்குமாரை சந்தித்த பிறகு நேற்று முன்தினம் மாலை செங் கோட்டைக்கு வந்த அவர், மீனாட்சி புரம் சென்று வழக்குக்கான ஆதாரங் களை சேகரித்தார். நேற்று 2-வது நாளாக ராம்குமாரின் பெற்றோர், உறவினர்கள் உள்ளிட்டோரை சந்தித்துப் பேசினார். இது தொடர் பாக நேற்று மாலை ‘தி இந்து’ செய்தியாளரிடம் வழக்கறிஞர் எஸ்.பி.ராம்ராஜ் கூறியதாவது:

ராம்குமார் மட்டுமின்றி, அவரின் குடும்பத்தினரும் காவல்துறையால் கடுமையாக மிரட்டப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவருமே உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், ராம்குமாருக்கு அவரது சொந்த ஊர் மக்கள் இன்னும் ஆதரவாக உள்ளனர். அதேசமயம், ஒரு பெண்ணின் கொலையை இந்த கிராம மக்களோ, இச்சமூகமோ ஏற்றுக்கொள்ளாது.

உண்மைகள் தெரியவரும்

இந்த வழக்கில் ராம்குமாருக்கு உடனடியாக ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய் யப்போவதில்லை. அதேநேரத்தில் ராம்குமாருக்கு மனரீதியான சிகிச்சை அளிக்க வேண்டும் என்று கேட்டு மனு தாக்கல் செய்ய உள்ளோம்.

இந்த வழக்கில் உண்மை வெளியே வரவேண்டும் என்பது தான் எங்களது நோக்கம். இன் னும் ஓரிரு நாளில் சிறையில் மீண்டும் ராம்குமாரை சந்தித்து பேச உள்ளேன். அவரிடம் தனியாக அரை மணி நேரம் பேசினால் பல உண்மைகள் தெரியவரும். சுவாதி கொலை வழக்கில் உண்மை குற்றவாளிகளை கண்டுபிடிக்க காவல்துறையினர் முன்வர வேண்டும் என்றார்.

ராம்குமாரின் தந்தை பரமசிவன் கூறும்போது, “சுவாதியை எனது மகன் கொலை செய்ய வாய்ப்பு இல்லை. சுவாதியை கொலை செய் தது யார் என்பதை போலீஸார்தான் கண்டுபிடிக்க வேண்டும்” என்றார்

SCROLL FOR NEXT