தமிழகம்

இந்தி விவகாரத்தில் ஸ்டாலின் இரட்டை வேடம்: தமிழிசை குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

கல்லாக இருந்தாலும், கல்வியாக இருந்தாலும் இந்தியை திணிக்கக்கூடாது என்ற அக்கறை எங்களுக்கு உண்டு. இந்த விஷயத்தில் மு.க.ஸ்டாலின் இரட்டை வேடம் போடுகிறார் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக சென்னை தண்டையார்பேட்டையில் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் கூறுகையில், ''கல்லாக இருந்தாலும், கல்வியாக இருந்தாலும் இந்தியை திணிக்கக் கூடாது என்ற அக்கறை எங்களுக்கு உண்டு. இந்த விஷயத்தில் மு.க.ஸ்டாலின் இரட்டை வேடம் போடுகிறார்.

விவசாயிகளின் நலனுக்காகத்தான் பயிர் பாதுகாப்பு திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இந்தத் திட்டத்தில் தமிழகத்தில் 50 லட்சம் பேரை பதிவு செய்ய முடியும். ஆனால், தமிழகத்தில் 13 ஆயிரம் பேர் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு இந்த திட்டத்தில் இணையாமல் மத்திய அரசை குறை சொல்வதில் நியாயம் இல்லை'' என்றார்.

நெடுஞ்சாலை மைல் கற்களில் இந்தி எழுத்துக்கு திமுகவே காரணம் என்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் குற்றம் சாட்டினார். இந்நிலையில் தமிழிசை சவுந்தராஜன் 'இந்தி' விவகாரத்தில் ஸ்டாலின் இரட்டை வேடம் போடுவதாக குற்றம்சாட்டியுள்ளார்.

SCROLL FOR NEXT