தமிழ் பெயர்களுடன் விளங்கி வரும் புராதனமான கடவுள்களுக்கு வடமொழியில் பெயர் மாற்றம் செய்யக் கூடாது என்று முதல்வரின் தனிப்பிரிவில் இந்து மக்கள் கட்சி சார்பில் மனு அளிக்கப்பட்டது.
இது தொடர்பாக இந்து மக்கள் கட்சி சார்பில் முதல் வரின் தனிப்பிரிவில் நேற்று கொடுக்கப்பட்ட மனுவில் கூறி யிருப்பதாவது:
மழலையர் கல்வி, ஆரம்பக் கல்வி ஆகியவற்றில் தமிழை மட்டுமே தாய்மொழியாக வைத்திருக்க வேண்டும். தமிழகத்தில் தமிழை அரசு நிர்வாக மொழியாக மாற்ற வேண்டும். தமிழ் வழிபாட்டு மொழியாக்கப்பட வேண்டும். உயர் நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழை ஆக்க வேண்டும். தமிழகத்தில் தமிழ் பயின்றோருக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை தர வேண்டும். தமிழகத்தில் உள்ள பழமையான திருக்கோயில்களில் புராதனமான கடவுள்களுக்கு உள்ள தமிழ்ப் பெயரை வடமொழியில் மாற்றுவதை தடை செய்து பழம் பெயர்களையே சூட்ட உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப் பட்டுள்ளது.