மத்திய அரசிடம் அதிகாரங்களை குவிக்கும் போக்கு மாற வேண்டும். நிதி ஆதாரங்களை பெருக்க மாநில அரசுகளுக்கு அதிக அதிகாரங்கள் வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.
மாநிலங்களுக்கு இடையே யான கவுன்சில் கூட்டம், 10 ஆண்டுகளுக் குப் பிறகு டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று நடைபெற்றது. அதில் தமிழகத்தின் சார்பில் பங்கேற்ற நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் ஜெயலலிதாவின் உரையை வாசித்தார். அதில் கூறியிருப்பதாவது:
சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்து சட்டம் மற்றும் நிதி அதிகாரங்கள் மத்திய அரசிடமே குவிந்திருக்கும் வகையிலேயே முயற்சிகள் மேற்கொள்ளப்பட் டுள்ளன. ஆனால், பொதுமக்க ளுக்கு நெருக்கமாக இருப்பது மாநில அரசுகள்தான். சட்டம் - ஒழுங்கு பாதுகாப்பு, பொது சுகா தாரம், விவசாயம், கல்வி போன்ற அடிப்படையான விஷ யங்களில் மக்களின் தேவைகளை மாநில அரசு கள்தான் பூர்த்தி செய் கின்றன.
மாநிலங்களின் அரசியல், நிர்வாக, பொருளாதார பங்களிப்பு அதிகரித்துள்ளது. ஆனால், மத்திய - மாநில அரசுகளின் உற வுகளில் மாற்றம் ஏற்படவில்லை. மாநிலங்கள் வளர்ச்சி அடைய வேண்டுமானால் மாநில அரசு களுக்கு நிதி ஆதாரங்களைப் பெருக்கக்கூடிய அதிகாரங்கள் வேண்டும்.
அதிகாரங்கள் அனைத்தும் மத்திய அரசிடம் குவிந்திருந்தால் மாநிலங்கள் வளர்ச்சி அடைய முடியாது. எனவே, அதிகாரங்களை மத்திய அரசிடம் குவிக்கும் போக்கு மாற வேண்டும். வலி மையான மாநிலங்களால்தான் வலிமையான இந்தியா உருவா கும். மத்தியில் உள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு கூட் டுறவுடன் கூடிய கூட்டாட்சியை ஆதரிக்கிறது. இந்த மாற்றம் வர வேற்கத்தக்கது.
பூஞ்சி ஆணைய பரிந்துரைகள்
மத்திய, மாநில உறவுகள் பற்றி ஆராய அமைக்கப்பட்ட எம்.எம். பூஞ்சி ஆணையம் தனது பரிந்து ரைகளை 2010-ம் ஆண்டு அளித் தது. மாநிலங்களின் நலன்களை கருத்தில்கொண்டு பல்வேறு பரிந் துரைகளை இந்த ஆணையம் அளித்துள்ளது. மத்திய அரசின் அதிகாரங்களை கட்டுப்பாட்டு டன் பயன்படுத்த வேண்டும் என பூஞ்சி ஆணையம் கூறியுள்ளது. ஆனால், மாநிலப் பட்டியலில் இருந்த வனம், வன விலங்குகள் உள்ளிட்ட பல்வேறு துறைகள் மத்திய பட்டியலுக்கு மாற்றப்பட் டுள்ளன. கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும். மத்திய பட்டியலுக்கு மாற்றப்பட்ட சுற்றுச்சூழல், பரு வநிலை மாற்றம் ஆகியவற்றை பொது அதிகாரப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும்.
மத்திய, மாநில முதலீடு ஒப்பந்தம் பற்றிய பரிந்துரைகளை மத்திய நிதி அமைச்சகம் வெளியிட் டுள்ளது. இது வரவேற்கத்தக்கது என்றாலும் மத்திய அரசு தனது நிதிச் சுமையை மாநில அரசுகளி டம் சுமத்த முயற்சிக்கிறதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
ஆளுநர்கள் நியமனம், நீக்கம் தொடர்பாக சில பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளன. மாநில அரசு களின் அதிகாரங்களைப் பறிக்காத வகையில் ஆளுநரின் அதிகாரங் கள் இருக்க வேண்டும். மாநில அமைச்சரவையின் ஆலோசனை களை பெற்று ஆளுநர் செயல்பட வேண்டும். ஆளுநர்களை விருப் பத்துக்கு ஏற்ப நியமிப்பதோ, நீக்குவதோ கூடாது. ஆளுநர்களின் பதவிக்காலம் 5 ஆண்டுகளாக இருக்க வேண்டும்.
மீனவர்கள் பிரச்சினை
வெளிநாடு மற்றும் உள்நாட்டு பிரச்சினைகளில் இருந்து மாநில அரசுகளை பாதுகாக்க வேண்டி யது மத்திய அரசின் கடமை என பூஞ்சி ஆணையம் கூறியுள்ளது. ஏழை இந்திய மீனவர்கள் தங்கள் பாரம்பரிய கடல் பகுதிகளில் மீன் பிடிக்கச் செல்லும்போது இலங்கை கடற்படையினரால் தாக்கப்படு கின்றனர். கைது செய்யப்படு கிறார்கள். தமிழக மீனவர்களை பாதுகாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாநில அரசுகளை கலைக்கும் 356-வது பிரிவு குறித்து எஸ். ஆர்.பொம்மை வழக்கில் உச்ச நீதிமன்றம் சில உத்தரவுகளை பிறப்பித்தது. மாநிலங்களின் உரிமைகளைப் பாதுகாக்க இதை சட்டமாக்க வேண்டும்.
ஆதார் அட்டை பதிவு
ஆதார் அட்டை பதிவு செய்யும் பணி, தேசிய பதிவாளர் ஜெனரல் மூலம் நடந்து வருகிறது. தமிழ கத்தில் இதுவரை 95.2 சதவீதம் பேருக்கு ஆதார் பதிவு செய்யப்பட் டுள்ளது. 91.9 சதவீதம் பேருக்கு ஆதார் அட்டை வழங்கப்பட்டுள் ளது. இந்தப் பணி வேகமாக நடக்க ஆதார் அட்டை பதிவு பணியை தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும். தமிழக அரசின் இ-சேவை மையங்கள் மூலம் இந்த சேவையை வழங்க முடியும்.
உணவு, மண்ணெண்ணெய், உரம் ஆகியவற்றுக்கான மானி யங்களை நேரடியாக வங்கிகள் மூலம் வழங்குவதை தவிர்க்க வேண்டும். கிராமங்களில் போதிய வங்கிகள் இல்லாததால் கூட்டு றவு வங்கிகள் மூலமும் நேரடி மானியம் வழங்க வேண்டும்.
மாநிலங்களவை என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அனைத்து சட்டங்களும் மக்களவை, மாநிலங்களவை இரண்டிலும் நிறைவேற்றப்பட்ட பிறகே சட்டமாகிறது. எனவே, அனைத்து மாநிலங்களுக்கும் சமமாக மாநிலங்களவை உறுப் பினர் பதவிகளை அளிக்க வேண்டும். அப்போதுதான் கூட் டாட்சி என்பது சாத்தியமாகும்.
சரக்கு மற்றும் சேவை வரி பிரச்சினையில் தமிழக அரசின் பரிந்துரைகளை பூஞ்சி ஆணையம் ஆதரிக்கிறது. தமிழகத்தின் வருவாய் பாதிக்காத வகையில் இது அமைய வேண்டும். சட்டம் - ஒழுங்கு சிறப்பாக பராமரிக்கப் பட்டு தமிழகம் அமைதிப் பூங் காவாக உள்ளது. வகுப்புவாத மற்றும் நக்சலைட் தீவிரவாதம் ஒடுக்கப்பட்டுள்ளது. தமிழக காவல் துறையினர் சுதந்திரமாக செயல்படுகின்றனர். அடிப்ப டைவாத தீவிரவாதத்தை ஒடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக் கப்பட்டு வருகிறது.
நதிநீர் இணைப்பு திட்டத்தை செயல்படுத்த வேண்டும். முதல் கட்டமாக தென்னக நதிகளை இணைக்க வேண்டும். காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர் ஒழுங்காற்று குழு ஆகியவற்றை அமைக்க வேண்டும். இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா கூறியுள் ளார்.