எந்தக் காலத்தில் வாழ்ந்தாலும், கற்கும்போதும், அனுபவங்களை உற்று நோக்கும்போதும் உணரக் கூடியது திருக்குறள். வள்ளுவத்தை இனம்காண காரணமானவர்கள் உரையாசிரியர்களே. இவர்கள் இல்லையெனில், திருக்குறளைப் புரிந்துகொள்ளாமல்கூட போயிருப் போம். 1330 குறள்கள், 14,000 சொற் கள், 42,194 எழுத்துகள், 133 அதிகாரங்களைக்கொண்ட திருக் குறளை அனிச்சம், குவளை மலர் கள், நெருஞ்சி பழம், குன்றிமணி விதை, பனை, மூங்கில் மரம் உள்ளிட்டவை பற்றிய பல்வேறு தகவல்களும் பொதிந்த கருத்து களஞ்சியம் எனலாம்.
இத்தகைய சிறப்பு பெற்ற திருக்குறளை இளைய தலைமுறை யினருக்கு கொண்டுசெல்லும் பணி யில், மதுரை வேளாண்மை கல்லூரி யில் பொறியாளராக இருந்து ஓய்வுபெற்ற க.சி.அகமுடைநம்பி ஈடுபட்டுள்ளார். திருக்குறள் பற்றி பள்ளி, கல்லூரி நிகழ்ச்சிகளில் பேசு கிறார். தனது கிராமமான மதுரை அருகே அ.தொட்டியபட்டியில் 20 ஏக்கரில் வேப்பந்தோப்பு ஒன்றை உருவாக்கியுள்ளார். அங்கு 2006-ம் ஆண்டு முதல் தைப் பொங்கலை அடுத்து, திருக்குறள் ஆய்வு கருத்தரங்கைத் தொடர்ந்து நடத்தி வருகிறார்.
விவாதப் பொருளாக குறள்
குறளில் தெளிவாக புரியாத கூறுகளை விவாதப் பொருளாக எடுத்து, தமிழறிஞர்களுடன் விவா தம் அரங்கேறுகிறது. குறளில் பெண் ணியம், இறைமை, பொதுமை, முப்பால் அறம், குடிமை, முப் பாலில் ஒப்புரவு, உறவு-துறவு, ஊழும்-கூழும், காமம், மனித உறவும் நட்பும், உயிர்ச்சூழல் ஆகிய தலைப்புகளில் விவாதங்கள் நடை பெற்றுள்ளன. தமிழறிஞர்கள், திருக் குறள் ஆய்வாளர்கள், ஆர்வலர்கள் சூழ வேப்ப மரத்தடியில் இந்த ஒருநாள் கருத்தரங்கு நிகழ்வு நடைபெறுகிறது. கருத்தரங்கில் இடம்பெறும் கட்டுரைகளைத் தனி நூலாக தொகுத்து, மாணவர்கள், குறள் ஆர்வலர்களுக்கு வழங்கி வருகிறார் அகமுடைநம்பி.
க.சி.அகமுடைநம்பி
இதுகுறித்து அவர் கூறியதாவது: பெற்றோரிடம் ஆங்கில மோகம் அதிகரித்துள்ளது. தாய்மொழியில் கல்வி கற்க வலியுறுத்தினால் தீண் டத்தகாததுபோல பார்க்கின்றனர். முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், சர் சி.வி.ராமன் போன்றவர்கள் தாய்மொழியில் கற்று சாதனை படைத்தவர்களே. திருக்குறள் மாணவர்கள் மத்தியில் தவழ்ந்தால் நல்ல சிந்தனைகள் வளரும்.
குறளைப் பலர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தாலும், உலக அள வில் சரியான இடம் கிடைக்க வில்லை. தமிழ், ஆங்கிலம் கலந்து குறளை வெளிநாட்டினர் படிப்ப தில்லை. திருக்குறளை முழு சாறு பிழிந்து ஆங்கிலத்தில் எழுத வேண் டும். அனைவரும் விரும்பும் வகை யில் திருக்குறள் மொழிபெயர்ப்பு தேவை. தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் குறளைத் தனிப் பாட மாக்க வேணடும். இதற்கான முயற் சியை அரசு முன்னெடுக்க வேண் டும் என்றார்.
அ.தொட்டியபட்டி வேப்பந்தோப்பில் கடந்த 2010-ம் ஆண்டு நடைபெற்ற குறள் கூறும் குடிமை கருத்தரங்கில் பங்கேற்ற முதுபெரும் தமிழறிஞர் தமிழண்ணல் உள்ளிட்டோர்.
(கோப்புப் படம்)
க.சி.அகமுடைநம்பி
திருக்குறளை முழு சாறு பிழிந்து ஆங்கிலத்தில் எழுத வேண்டும். அனைவரும் விரும்பும் வகையில் திருக்குறள் மொழிபெயர்ப்பு தேவை.