பள்ளிக்கல்வித் துறையில் பணி யாற்றும் அமைச்சுப் பணியாளர்கள் மற்றும் நூலகர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடப்படாதது ஏமாற்றம் அளிப்பதாக தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாநில தலைவர் ஆர்.சண்முகராஜன் கவலை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
சட்டப்பேரவையில் பள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்கையின்போது அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்ட 37 அறிவிப்புகள் அத்துறையை மேம்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை. அதே நேரத்தில் பள்ளிக் கல்வித் துறை மற்றும் பொது நூலகத் துறையில் பணியாற்றும் அமைச்சுப் பணியாளர்கள் மற்றும் நூலகர்களின் கோரிக் கைகள் தொடர்பாக எந்த அறிவிப்பையும் வெளியிடாதது ஏமாற்றம் அளிக்கிறது. இதனால் அவர்கள் மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.
விடுமுறை நாட்களில்கூட கடுமையாக பணியாற்றி வரும் அமைச்சுப் பணியாளர்களின் பணிச்சுமையைப் போக்கும் வகையில் அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று தமிழக அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகி றோம்.
அதேபோல் நூலகத் துறையில் பணியாற்றி வரும் நூலகர்கள் தற்போது சில்லறை செலவினத்தில் வழங்கப்படும் ஊதியத்தை கருவூலம் மூலமாக வழங்க வேண்டும் என்றும், ஊர்ப்புற நூலகர்களை 4-ஆம் நிலை நூலகர்களாக பெயர் மாற்றம் செய்து கால முறை ஊதியம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து வரு கிறார்கள்.
ஆனால், இவர்களின் கோரிக்கைகள் அறிவிப்பில் இடம்பெறாதது மிகுந்த ஏமாற் றத்தை அளிக்கிறது.
எனவே, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர், அமைச்சுப் பணியாளர்கள் மற்றும் நூலகர்களின் கோரிக்கைகளை பரிசீலித்து உடனடியாக கூடுதல் அறிவிப்புகளை வெளியிட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு செய்திக்குறிப் பில் கூறப்பட்டுள்ளது.