தமிழகம்

புகைப்படங்களின் காதலி!

மகராசன் மோகன்

பொழுதுபோக்காகப் புகைப்படம் எடுக்க ஆரம்பித்த பிரியா, இன்று அதற்காக நாள்முழுதும் ஒதுக்கும் அளவுக்குத் தீவிர ஈடுபாட்டுடன் இருக்கிறார். சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறப்பகுதிகளை மட்டும் தன் கேமரா கண்களுக்குள் சிறைப்பிடித்தவர், நிறைய முன்னேறிவிட்டார். வாரணாசி, அலகாபாத் கும்பமேளா, சீதாநதி, ஆலப்புழா, ஆக்ரா, ஜெய்ப்பூர் என்று மாநிலம் கடந்து ஒளி வழி தடம் பதித்துவருகிறார்!

''நாம ரசிக்கிற எல்லாத்தையும் கொஞ்சம் ரசனை கலந்து கொடுப்பதும், எதுவுமே இல்லைன்னு சொல்ற ஒரு விஷயத்தை அர்த்தப்படுத்துவதும்தான் என் போட்டோகிராஃபி ஸ்டைல். டெக்ஸ்டைல்ஸ் துறையில் முதுகலை படிப்பை முடித்த கையோடு சென்னையில் உள்ள ஒரு சாஃப்ட்வேர் நிறுவனத்தில் பிஸினஸ் அனலிஸ்ட் வேலை. நான் உண்டு என் வேலை உண்டுன்னு இருந்த எனக்கு என் நண்பர்கள்தான் புகைப்பட ஆர்வத்தைக் கொண்டுவந்தாங்க. அவங்களோட சேர்ந்து 'வீக் எண்ட் க்ளிக்கர்ஸ்' போட்டோகிராஃபி கிளப்ல சேர்ந்தேன். ஒரு பக்கம் வேலை, மறுபக்கம் போட்டோகிராஃபினு இருப்பது ஆனந்தமா இருக்கு. எப்பவும் ஃபேஷனாவும், மற்றவர்களை சிந்திக்க வைப்பதாவும் என் புகைப்படங்கள் இருக்கணும். அதுதான் என் விருப்பம்!''

கேமரா ஃபிளாஷ் போலப் பளிச்சென்று முடித்தார் பிரியா!

SCROLL FOR NEXT