தமிழகம்

சென்னை மாநகர பகுதிகளில் நீர்வழிப் பாதைகளில் கழிவுநீர் கலந்தால் லாரி பறிமுதல்: மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை

செய்திப்பிரிவு

சென்னை மாநகராட்சி பகுதியில் உள்ள நீர்வழிப் பாதைகளில் கழிவுநீரை விடும் லாரிகள் பறி முதல் செய்யப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணை யர் தா.கார்த்திகேயன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை மாநகரப் பகுதியில் பெய்யும் மழை நீர், இயற்கையாக வடிந்து செல்லும் வகையில் 2 ஆறுகளும், 32 கால்வாய்களும் உள்ளன. இதில் 31 கால்வாய்கள் மாநகராட்சி பராமரிப்பில் உள் ளன. அவை சுமார் 1660 கிமீ நீளத் துக்கு சென்னையில் ஓடுகின்றன. தற்போது அனைத்து ஆறுகள் மற்றும் கால்வாய்களில் கழிவு நீர்தான் ஓடுகிறது. இந்த நீர்வழிப் பாதைகளில் கழிவுநீர் விடப்படு வதைத் தடுக்க அரசு ஒருபுறம் நடவடிக்கை எடுத்தாலும், மறுபுறம் கண்டுகொள்ளாமலும் இருந்து வருகிறது. அதிலும் உச்சகட்டமாக நீர்வழிப் பாதைகளில் கழிவுநீர் விடப்படுவதைத் தடுக்க வேண் டிய சென்னை குடிநீர் வாரி யமே கழிவுநீரை விட்டு, சுகா தாரக் கேட்டை ஏற்படுத்தி வருவது, பொதுமக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

இவ்வாறு நீர்வழிப்பாதைகளில் கழிவுநீர் விடப்படுவதால், அவற் றில் ஆகாயத் தாமரைச் செடிகள் அதிகம் வளர்வதுடன், அவை கழிவு நீர் வழிந்தோடுவதைத் தடுக்கிறது. இதனால் தேங்கும் கழிவுநீரில் கொசு உற்பத்தி அதிகரித்து, அவை பல்வேறு நோய்களை பரப்புகின்றன. மாநகரெங்கும் கொசுக்களை ஒழிக்க புகை மருந்து களையும் 15 நாட்களுக்கு ஒரு முறை அடிக்க வேண்டியுள்ளது. தனியார் லாரிகள் மற்றும் சென்னை குடிநீர் வாரிய லாரிகளின் விதிமீறல் களால், சென்னை மாநகராட்சிக்கே கூடுதல் வேலைச்சுமை ஏற்படு கிறது. ஏற்கெனவே, நிதிப் பற்றாக் குறையில் சிக்கியுள்ள சென்னை மாநகராட்சி, நீர்வழிப் பாதைகளில் விடப்படும் கழிவுநீரால் ஏற்படும் பாதிப்புகளை சரி செய்ய போதிய நிதி ஒதுக்க முடியாமல் அவதிப்பட்டு வருகிறது.

விதி மீறுவோர் மீது நடவடிக்கை

விதிகளை மீறுவோருக்கு, பொது சுகாதார சட்டத்தின், 44-வது பிரிவின் கீழ் சொற்பமான அபராதத்தையே மாநகராட்சி நிர்வாகத்தால் விதிக்க முடியும். ஆனால், அதற்கான வழக்கு நடை முறைகள், கோப்புகளை தயாரிக் கவே அவர்களுக்கு பல மணி நேரம் தேவைப்படும். இதன் காரண மாகவே, மாநகராட்சி நிர்வாகமும், நீர்வழிப் பாதைகளில் கழிவுநீர் விடுவோர் மீது நடவடிக்கை எடுப்பதில்லை.

இது தொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணையர் தா.கார்த்தி கேயனிடம் கேட்டபோது, “நீர்வழிப் பாதைகளில் கழிவுநீரை விட்டால், சம்பந்தப்பட்ட லாரியை பறிமுதல் செய்ய வேண்டும் என்று உத்தர விட்டிருக்கிறேன்.

அந்த உத்தரவை முறை யாக பின்பற்றுமாறு, மாநகராட்சி அதிகாரிகளுக்கு அறிவுறுத் தப்பட்டுள்ளது” என்றார்.

SCROLL FOR NEXT