தமிழகம்

மத்திய அரசின் ஒற்றைத் தீர்ப்பாயம் குறித்து டி.டி.வி.தினகரன் கருத்துக்கு காவிரி உரிமை மீட்புக் குழு கண்டனம்

செய்திப்பிரிவு

காவிரி நடுவர் மன்றத்தை கலைத்து விட்டு, ஒற்றைத் தீர்ப்பாயம் அமைக்கும் மத்திய அரசின் நட வடிக்கைக்கு ஆதரவாக அதிமுக துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரனின் அறிக்கை உள்ளதாக காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணி யரசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

காவிரி நடுவர் மன்றம் உள் ளிட்ட நதிநீர் பிரச்சினை தொடர் பான நடுவர் மன்றங்களை கலைத்து விட்டு, ஒற்றைத் தீர்ப்பாயம் அமைக் கும் மத்திய அரசின் முடிவைக் கைவிட வேண்டும். காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வேண்டும். விவசாயி களுக்கு முழுமையான வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் தஞ்சாவூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு, 8-வது நாளாக நேற்றும் காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது.

அப்போது, காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் கூறியதாவது:

அதிமுக துணைப் பொதுச் செய லாளர் டி.டி.வி.தினகரன் நேற்று முன்தினம் வெளியிட்டுள்ள அறிக் கையில், தேசிய அளவிலான ஒரே தீர்ப்பாயம்தான் காவிரி பிரச்சினைக்கு தீர்வு என்று தெரி வித்துள்ளார்.

மத்திய நீர்வளத் துறை அமைச்சர் உமாபாரதி தெரிவித்த ஒற்றைத் தீர்ப்பாயத்துக்கும், இவர் விடுத்துள்ள அறிக்கைக்கும் வித்தி யாசம் இல்லை. தமிழகத்தை ஆட்சி செய்யும் ஒரு கட்சியின் துணைப் பொதுச் செயலாளர், இப்படி அறிக்கை வெளியிட்டிருப்பது, மத்திய அரசின் பாதகமான செயலுக்கு பக்கவாத்தியம் வாசிப்பதுபோல உள்ளது. வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதுபோல உள்ள அறிக்கைக்கு சரியான விளக்கத்தை அவர் அளிக்க வேண்டும் என்றார்.

SCROLL FOR NEXT