தமிழகம்

திருமண நிதி உதவியுடன் தாலிக்கு 8 கிராம் தங்கம் வழங்கும் திட்டம்: முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்

செய்திப்பிரிவு

இந்த நிதியாண்டுக்கான திருமண நிதியுதவி வழங்கும் திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா நேற்று தொடங்கி வைத்தார்.

இது தொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப் பதாவது:

சமூக நலத்துறை மூலம் ஏழை பெற்றோரின் பெண்கள், விதவைத் தாயின் மகள், ஆதரவற்ற பெண்கள், கலப்புத் திருமணம் செய்துகொள்ளும் தம்பதியர், மறுமணம் செய்யும் விதவையர் ஆகியோருக்கு உதவும் வகையில், திருமண உதவித் தொகை வழங்கும் திட்டம் 2011 முதல் செயல்படுத்தப்படுகிறது.

இதன்படி இளநிலைப் பட்டம் அல்லது டிப்ளமோ படித்த பெண் களுக்கு திருமண உதவித் தொகை யாக ரூ.50 ஆயிரம், திருமாங்கல் யத்துக்கு 4 கிராம் தங்கம் வழங்கப் படுகிறது. படித்த ஏழைப் பெண் களுக்கு திருமண நிதியுதவியாக ரூ.25 ஆயிரம் மற்றும் 4 கிராம் தங்கம் வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு தேர்தல் அறிக்கையில் கூறியபடி, திருமண நிதியுதவியுடன் தாலிக்கு வழங்கப்படும் 4 கிராம் தங்கம் 8 கிராமாக உயர்த்தி வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.

இத்திட்டப்படி, 2016-17ம் ஆண்டுக்கு இதுவரை 12 ஆயிரத்து 500 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர் களுக்கு திருமண நிதியுதவியுடன் 8 கிராம் தங்க நாணயம் வழங்கும் திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா நேற்று தொடங்கிவைத்தார். இதன் அடையாளமாக ஆர்.கே.நகர் சட்டப்பேரவைத் தொகுதி மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 5 பயனாளிகளுக்கு திருமண நிதியுதவியுடன் 8 கிராம் தங்க நாணயங்களை வழங்கினார்.

இதை பெற்றுக்கொண்டவர்கள், முதல்வருக்கு நன்றி தெரிவித்தனர்.

திருமாங்கல்யம் செய்ய தங்கம் வழங்கும் திட்டத்தின் கீழ், 2016-17ம் நிதியாண்டுக்கு ரூ.204 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, கடந்த மே 23-ம் தேதிக்குப் பிறகு விண்ணப்பித்த 12 ஆயிரத்து 500 பயனாளிகளுக்கு 8 கிராம் தங்க நாணயங்களும், அதற்கு முன்பு விண்ணப்பித்த 1 லட்சத்து 40 ஆயிரம் பயனாளிகளுக்கு 4 கிராம் தங்க நாணயங்களும் வழங்கப்படுகின்றன.

நிகழ்ச்சியில், சமூக நலத்துறை அமைச்சர் வி.சரோஜா, தலைமைச் செயலர் பி.ராமமோகன ராவ், அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

மருத்துவ புத்தகங்கள்

நமது எம்ஜிஆர் மற்றும் அம்மா பெஸ்ட் அறக்கட்டளை சார்பில் மருத்துவப் படிப்புக்கான 10 தொகுப்பு புத்தகங்களை முதல்வர் ஜெயலலிதா, மருத்துவக் கல்லூரி நூலகங்களுக்கு வழங்கினார்.

இது தொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

அரசு மருத்துவக் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் பயன் பெறும் வகையில், நமது எம்ஜிஆர் பெஸ்ட் அறக்கட்டளை மூலம் ரூ.75 ஆயிரம் மதிப்பிலான 5 தொகுப்பு, அம்மா பெஸ்ட் அறக்கட்டளை மூலம் ரூ.75 ஆயிரம் மதிப்புள்ள 5 தொகுப்பு எம்பிபிஎஸ் படிப்புக்கான புத்தகங்கள் வழங்கப்படுகின்றன. இந்த புத்தகங்கள் திருவாரூர், திருவண்ணாமலை, சிவகங்கை, விழுப்புரம், கோவை அரசு மருத்துவக் கல்லூரிகள், சென்னை அரசு பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை ஆகிய அரசு மருத்துவக் கல்லூரி நூலகங்கள் பயன்பாட்டுக்காக வழங்கப் பட்டுள்ளன.

4 ஆண்டு எம்பிபிஎஸ் மருத் துவப் படிப்புக்குத் தேவையான 10 தொகுப்பு புத்தகங்களை சுகாதாரத்துறை செயலர் ஜெ.ராதா கிருஷ்ணனிடம் முதல்வர் ஜெய லலிதா வழங்கினார். நிகழ்ச்சியில் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், தலை மைச் செயலர் பி.ராமமோகன ராவ் உள்ளிட்டோர் இருந்தனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT