உதகை தொட்டபெட்டா காப்புக் காடுகளில் வலம் வரும் புலி மூன்று நபர்களை கொன்றது. இதனால் புலியை அதன் இருப்பிடத்திலிருந்து வெளியே கொண்டு வர வனம் மற்றும் தேயிலை எஸ்டேட்டுகளில் பட்டாசுகள் வெடிக்கப்பட்டன. அதன் கால் தடங்கள் பதிவான இடத்தில் குழி தோண்டி, அதில் வலை விரித்து, அதன் மேல் மனித பொம்மையை வைக்கப்பட்டுள்ளது. பொம்மை மீது ரத்தம் ஊற்றி அதன் மீது இறைச்சி வைத்து புலியை ஈர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது. வலையின் அருகே இரும்பு கூண்டில் புலியை சுட வனஅதிகாரிகள் காத்துக்கொண்டிருக்கின்றனர்.
ஆனால், ஞாயிறு இரவு குந்தசப்பை பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்தில் புலி நடமாடியதற்கான தடயங்கள் எதுவும் கிடைக்கவில்லை. அங்கு பொருத்தப்பட்டிருந்த 28 கேமராக்களிலும் புலி நடமாடியதற்கான புகைப்படங் களும் கிடைக்கவில்லை.
புலி வேறு பகுதிக்கு சென்று இருக்கலாமோ அல்லது 10 நாட்களுக்கு மேல் போதிய உணவு கிடைக்காத நிலையில், நடமாட முடியாமல் எங்காவது மயங்கிய நிலையில் கிடக்கிறதா என குழப்பம் வனத்துறையினரிடையே ஏற்பட்டுள்ளது. இதனால் குந்த சப்பை தேயிலை தோட்டங்கள், புதர்கள், நீரோடை அருகேயுள்ள இடங்களிலும், வனங்களிலும் தொடர்ந்து தேடுதல் வேட்டை யில் வனத்துறையினர், அதிரடிப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.