ஒலிம்பிக் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற பி.வி.சிந்துவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
டாக்டர் அன்புமணி ராமதாஸ் (தமிழ்நாடு இறகுபந்து சங்கத் தலைவர்):
இந்திய இளம் வீராங்கனை பி.வி. சிந்து ஒலிம்பிக்கில் சிறப்பாக விளையாடி வெள்ளிப் பதக்கம் வென்றிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. அவருக்கு தமிழ்நாடு இறகு பந்தாட்ட சங்கம் சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். அதிர்ஷ்டத்தில் கிடைத்த வெற்றியை விட போராட்டத்துக்குப் பின் கிடைத்த தோல்வி பெருமையானது. அந்த பெருமை சிந்துவுக்கு கிடைத்துள்ளது.
தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்:
இந்திய வீராங்கனை பி.வி.சிந்து நம் அனைவரின் உள்ளத்திலும் தங்க மகள்... சாதனை நாயகிக்கு தமிழக பா.ஜ.க சார்பில் வாழ்த்துகள் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.