தமிழகம்

த.மா.கா உருவானாலும் காங்கிரஸுக்கு பாதிப்பில்லை: தங்கபாலு

செய்திப்பிரிவு

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி உருவானாலும் காங்கிரஸ் கட்சிக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என கே.வி.தங்கபாலு தெரிவித்துள்ளார்.

சென்னையில் காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் தங்கபாலு இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், "ஜி.கே.வாசன் காங்கிரஸை விட்டு வெளியேறக் கூடாது என்றே நான் விரும்புகிறேன். அதையும் மீறி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி உருவானாலும் காங்கிரஸ் கட்சிக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது.

காங்கிரஸ் கட்சியில் உண்மையான தொண்டர்கள் இருக்கின்றனர். எனவே, தமிழக காங்கிரஸ் கட்சிக்கு பாதிப்பு ஏற்படாது" என்றார்.

SCROLL FOR NEXT