அத்திக்கடவு, அவிநாசி திட்டம் எப்போது முடிவடையும் என்று கேள்வி எழுப்பியுள்ள நீதிபதி கள், இத்திட்டத்தை முடிக்கும் வகையில் காலநிர்ணயம் செய்து முழு அட்டவணையை உயர் நீதிமன்றத்தி்ல் தாக்கல் செய்யுமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளனர்.
அத்திக் கடவு, அவிநாசி திட்டத்தை விரைந்து செயல்படுத்தக் கோரி கோவை மாவட்டம் பி.பு ளியம்பட்டியைச் சேர்ந்த வி.ஆர். ஒத்திசாமி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய் தார். அந்த மனுவில் கூறப்பட்டுள்ள தாவது:
காவிரியின் மிகப்பெரிய கிளை ஆறுகளில் ஒன்று பவானி. கோவை மாவட்டத்திலேயே அவிநாசி தாலுகாதான் வறட்சி பாதித்த பகுதி. இந்த தாலுகாவின் சராசரி மழை யளவு 600 மி.மீ முதல் 737 மி.மீ மட்டுமே. அவிநாசி தாலுகாவின் ஒரு பகுதி பவானி ஆற்றங்கரை யில் உள்ளது. இந்த பகுதியில் உள்ள அண்ணூர், அவிநாசி, திருப்பூர், பல்லடம் உள்ளிட்ட பகுதி மக்களின் குடிநீர் மற்றும் விவசாய தேவையை பூர்த்தி செய்யவும், நிலத்தடி நீர்மட்டம் பெருகவும் அத்திக்கடவு- அவிநாசி கால்வாய் திட்டத்தை நிறைவேற்ற வேண்டுமென்ற கோரிக்கை பல ஆண்டுகாலமாக இருந்து வருகிறது. எனவே இத்திட்டத்தை விரைவாக முடிக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட் டிருந்தது.
இந்த மனு மீதான விசாரணை தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் மற்றும் நீதிபதி ஆர்.மகாதேவன் முன்பு நடந்தது. அப்போது தமிழக அரசு சார்பி்ல் பொதுப்பணித் துறை தலைமைப் பொறியாளர் எஸ். தினகரன் தாக்கல் செய்த பதில் மனுவில், ‘‘அத்திக்கடவு- அவிநாசி கால்வாய் திட்டத்தை செயல்படுத்த கடந்த 2011-ல் ரூ. ஆயிரத்து 862 கோடி மதிப்பில் தி்ட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டது. இதன்மூலம் பில்லூர் பவானி ஆற்றில் வடியும் சுமார் 2 ஆயிரம் கனஅடி வெள்ள நீர் மூலம் பொதுப்பணித்துறையின் 31 நீர் ஆதாரத் தொட்டிகள், 40 பஞ்சாயத்து யூனியன் மேல்நிலைத் தொட்டிகள், கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் உள்ள 538 குளங்கள் நிரம்பும். கடந்த பிப்ரவரி 16-ம் தேதி இத்திட் டத்துக்கான திருத்திய மதிப்பீடு தயாரிக்கப்பட்டு மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்ப டும் என தமிழக நிதியமைச்சர் அறிவித்தார்.
அந்த அறிவிப்பின்படி திட்டத்தின் உடனடி தேவைக்காக ரூ.3.27 கோடி நிதி நிர்வாக ரீதியாக ஒதுக் கப்பட்டு அதன்மூலம் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அனுமதி, நிலஆர்ஜிதம் செய்யும் பணி நடை பெற்று வருகிறது. மேலும், இத்திட் டத்தின் திருத்திய மதிப்பீட்டின்படி ரூ. 3 ஆயிரத்து 523 கோடியை பிரதம மந்திரியின் கிரிஷி சிஞ்சாயி யோஜனா திட்டத்தின் மூலம் ஒதுக்க மத்திய நீர்வளத்துறை ஆணையத்திடம் கோருவது தொடர்பான நடவடிக்கையும் பரிசீ லனையில் இருந்து வருகிறது’’ என்று கூறப்பட்டிருந்தது.
இதைப்பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், ‘இத்திட்டம் எப்போது முடிவடையும் என கேள்வி எழுப் பினால் அதற்கு எந்த பதிலும் இல்லை. தற்போது வரை எந்த முன்னேற்றமும் இருப்பதாக தெரி யவில்லை. எனவே இத்திட்டத்தை விரைவாக முடிக்கும் வகையில் காலநிர்ணயம் செய்து அதற்கான முழு அட்டவணையையும் மத்திய, மாநில அரசுகள் ஒரு மாதத்தில் தாக்கல் செய்ய வேண்டும்’ என உத்தரவிட்டு விசாரணையை வரும் செப்டம்பர் 9-ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.