இறைச்சிக்காக மாடுகளை விற்க விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வலியுறுத்தியும், ஐஐடி மாணவர் சூரஜ் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத் தியும் பாரிமுனையில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகத்தை நேற்று காலை இந்திய மாண வர் சங்கத்தினர் முற்றுகையிட முயன்றனர். முற்றுகையிட திரண்ட மாணவர் அமைப்பினர் 50 பேரை பூக்கடை போலீஸார் கைது செய்ய முயன்றனர்.
இதைத் தொடர்ந்து மாணவர் அமைப்பினர் பிஎஸ்என்எல் அலு வலகம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து அனைவரையும் போலீஸார் கைது செய்து அப்புறப்படுத்தினர். மாலையில் அனைவரையும் விடுவித்தனர்.