தமிழகம்

மறைந்த ஏ.பி.பரதனுக்கு சென்னையில் நினைவஞ்சலி

செய்திப்பிரிவு

மாற்றுக் கட்சியினரும் மதிக்கின்ற தலைவர் ஏ.பி.பரதன் என்று அவரது மறைவையொட்டி சென்னையில் நடந்த நினைவஞ்சலி கூட்டத்தில் அரசியல் கட்சித் தலைவர்கள் புகழாரம் சூட்டினர்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஏ.பி.பரதன் மறை வையொட்டி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைமையகமான பாலன் இல்லத்தில் நேற்று மாலை நினைவஞ்சலி கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் தா.பாண்டியன் தலைமை வகித்தார்.

அனைத்து கட்சித் தலைவர்கள்

இதில் அமைச்சர் பழனியப்பன், திமுக தலைமை செய்தித் தொடர் பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், மதிமுக துணைப் பொதுச் செய லாளர் மல்லை சத்யா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், தமாகா துணை தலைவர் ஞானதேசிகன், பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்த ரராஜன், காங்கிரஸ் ஊடகத்துறை தலைவர் கோபண்ணா உள்ளிட் டோர் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற தலைவர்கள், ‘‘ஏ.பி.பரதன் பின்பற்றிய அரசியல் நாகரிகத்தின் காரணத்தால் மாற்றுக் கட்சியினரும் மதிக்கும் தலைவராக அவர் திகழ்ந் தார். அவரது இழப்பு இடதுசாரி களுக்கு மட்டுமன்றி நாட்டுக்கே பெரும் இழப்பு’’ என்று பேசினர்.

SCROLL FOR NEXT